jeyaraj - 2026

கன்னியாகுமரியில் 10ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் புகுந்து கடத்த முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ரணியல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்த ஜெயராம் (23) என்ற இளைஞர், 10ஆம் வகுப்பறையில் நுழைந்து மாணவி ஒருவரின் தந்தை இறந்துவிட்டதாகவும், அந்த மாணவியை அழைத்துச் செல்ல வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

school 1 - 2026

அந்த இளைஞர் மீது சந்தேகம் அடைந்த ஆசிரியர் ‘நீங்கள் யார் ?’ என கேள்வி எழுப்பியுள்ளார். உடனே அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை ஆசிரியரின் கழுத்தில் வைத்து மிரட்டி, மாணவியை அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆசிரியர் கூச்சல் போடவே, பள்ளியில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் ஓடி வந்துள்ளனர்.

kurunthankodu - 2026

அவர்களை கண்டதும் அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். ஆனால் சாலையில் அந்த நபரை மக்கல் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் கத்தியுடன் அந்த இளைஞரை ரணியல் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை கைது செய்த காவல்துறையினர், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த நபர் கர்நாடகாவின் குடகு பகுதியை சேர்ந்தவர் என்றும் அந்த இளைஞர் இதே மாணவியை கடந்த ஜூன் மாதம் குடகுப் பகுதி கடத்திச் சென்றதும், தெரிய வந்துள்ளது அப்போது கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதுவும் தெரிய வந்துள்ளது. தற்போது ஜாமீனில் வெளிவந்த அந்த நபர் மீண்டும் அந்த மாணவியை கடத்த முயன்றுள்ளார். அந்த மாணவியை அவர் முகநூல் மூலம் காதலித்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending