SEENIVASAN T - 2026

ஸ்டாலின் ஆட்சிக் கலைப்பு குறித்து ஏன் பேசுவதில்லை,காரணம் இதுதான் – திண்டுக்கல் சீனிவாசன்

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திரும்ப பெற்றவர்தான் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.அவர்

பேசுகையில்,நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திரும்ப பெற்றவர்தான் மு.க.ஸ்டாலின்.

ஆளும் கட்சிக்கு வர 20 திமுக எம்எல்ஏக்கள் தயாராக உள்ளதை அறிந்தே ஸ்டாலின் ஆட்சிக் கலைப்பு பற்றி பேசுவதில்லை.

எம்ஜிஆர், அண்ணாவால் வளர்ந்த திமுகவை ஸ்டாலின் தற்போது அவரது மகன் உதயநிதியை வைத்து வளர்க்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending