M B B S EXAM - 2026

அக்டோபர் 27 தீபாவளியை முன்னிட்டு மறுநாளும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் நடைபெறவிருந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வரும் அக்டோபர் 27 ஞாயிறன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

அதற்கு மறுநாள் அக்டோபர் 28 அன்று பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த அறிவியல் மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதனிடையே, தற்போது அக்.28ம் தேதியன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4-ஆம் தேதியும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending