
‘தனக்காக யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம்’ என, நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, கமல் விடுத்த அறிக்கை: நாளை என் பிறந்தநாள்.
அன்று பரமக்குடியில், என் தந்தை சிலையை திறக்க உள்ளேன்.
அப்போது, என்னை வரவேற்கும் வகையில், தொண்டர்கள், ரசிகர்கள் யாரும், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கொடிகள் எதுவும் வைக்க வேண்டாம்.
இதை, கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இவ்விஷயத்தில், எவ்வித காரணங்களும் ஏற்கப்படாது என்பதை, கண்டிப்பாக சொல்லிக் கொள்கிறேன்.
இனி நிகழவுள்ள அரசியல் மற்றும் ஆட்சி முறையில், மக்கள் நீதி மையம் கட்சி ஏற்படுத்த உள்ள மாற்றங்களை, நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்
என்பது, என் விருப்பம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.