tiruppati Laddu - 2026
திருமலை திருப்பதியில் வழங்கப்பெறும் லட்டு பிரசாதம்…

திருப்பதி திருமலை வரும் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப் போகிறது, ஸ்ரீவாரி லட்டு விலை உயர்வு விவகாரம்!

திருமலையில் ஸ்ரீவாரி லட்டு விலை இரட்டிப்பாக அதிகரிக்க உள்ளது. இதுவரை உள்ள சலுகை விலை அனைத்தையும் ரத்து செய்யப் போகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

இலவச தரிசனம், 300 ரூபாய் தரிசனம், விஐபி பிரேக் தரிசன பக்தர்கள்… போன்றவர்களுக்கு அளிக்கும் சலுகைகளை ரத்து செய்வதன் மூலம் லட்டு விற்பனையில் வரும் நஷ்டத்தை ஈடுகட்ட முடிவெடுத்துள்ளது.

பக்தர்கள் அனைவருக்கும் 160 – 180 கிராம் சின்ன லட்டு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் விரும்புகிறது. அதற்கு மேல் ஒவ்வொரு லட்டுவும் 50 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறது.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் மற்றுமொரு முக்கியமான முடிவு எடுக்க உள்ளது. இனி ஸ்ரீவாரி லட்டுவை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்ற யோசனையில் உள்ளது. லட்டு விநியோகம் விற்பனை இரண்டிலும் தள்ளுபடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டம் தயாரித்து வருகிறது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
laddu thirupathi - 2026

இனி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக 160- 180 கிராம் சின்ன லட்டு கிடைக்கும். அதன்பின்பு லட்டு ஒன்று ரூ.50 க்கு விற்கப்பட உள்ளது.

சந்தை விலையின் படி ஒரு லட்டு செய்வதற்கு சுமார் 40 ரூபாய் செலவாகிறது. அதன் மீது பக்தர்களுக்கு தள்ளுபடி செய்து விற்பதால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி செவ்வாயன்று அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

thirupathi laddu - 2026

அப்போது, இது குறித்து அனைவரும் ஒருமுகமாக கருத்து தெரிவித்தனர். எனவே இது குறித்து எடுத்த முடிவுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

லட்டு விலை தள்ளுபடியால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.2412 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான கணக்கெடுப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending