begger in tirupati - 2026

எஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.

திருப்பதி அர்பன் எஸ்பி செய்த செயலால் பாராட்டுகள் வந்து குவிகின்றன. அவருக்கு அதிகாரம் பெரிய தில்லை. நான் பிறர் என்ற வேறுபாடு இல்லை. இருப்பதெல்லாம் ஒன்றுதான். அது சேவை மனப்பான்மை. அதுவே அவருடைய மதமாக உள்ளது.

ஆன்மீக நகரமான திருப்பதியில் யாரும் இல்லாத ஒரு அனாதை பிச்சைக்காரர் நடை பாதை மீது உண்டு உறங்கி வாழ்ந்து வந்தார் . திருப்பதி அர்பன் எஸ்பி அலுவலகம் முன்பே அவர் படுத்துக் கொண்டிருப்பது வழக்கம்.

தினமும் அந்த வழியே எத்தனையோ பேர் போய் வந்தாலும் யாருமே கண்டு கொண்டதில்லை.

begger in tirupati 1 - 2026

அவருடைய நிலைமையைப் பார்த்து திருப்பதி எஸ்பி ஆவுல ரமேஷ் ரெட்டி தன் பதவியையும் ஹோதாவையும் பெரிதாக எண்ணாமல் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த பிச்சைக்காரர் அருகில் சென்று விசாரித்தார். அவருடைய நலனை தெரிந்துகொண்டு அவரை சாதாரண மனிதராக ஆக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

வெஸ்ட் சிஐ தலைமையில் பிச்சைக்காரருக்கு தலைமுடியை கத்தரித்து புது ஆடைகள் அணிவித்து வயிறு நிறைய சாப்பாடு கொடுத்து மருத்துவ உதவியளித்து ஆசிரமத்தில் கொண்டு சேர்த்தார்.

ஒவ்வொருவரும் ஒரு வேளையாவது அனாதைகளுக்கு அன்னம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவருடைய இந்த சேவை மனப்பான்மையைப் பார்த்து போலீசார்கள் தாங்களும் அதே வழியில் நடப்போம் என்று தெரிவித்தார்கள்.

மனநிலை சற்று சரி இல்லாத அந்த பிச்சைக்காரரை இவ்வாறு சேவை குணத்தோடு ஆதரவளித்த எஸ்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending