ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேடமிட்டு திருமணம்!

Published:

marriage - 2026

பெண்ணாக வேடமிட்டு ஆணாக வேடமிட்டுள்ள பெண்ணுக்கு தாலிகட்டும் சம்பிரதாயம் ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிச்சர்லபள்ளி கிராமத்தை சார்ந்தவர் அங்கையா. இவருக்கும் அருணா என்ற பெண்மணிக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்று முடிந்ததும் அங்கையா பெண் போல சேலை அணிந்தும், மணமகள் அருணா ஆண் போல குர்தா அணிந்து வந்தனர்.

தங்களின் உடையை மாற்றி அணிந்துகொண்டு திருமண ஜோடி, அங்குள்ள கிராம தேவதை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இது தொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், ” இந்த மாவட்டத்தில் கும்மா என்ற பெயர்கொண்ட குடும்பத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடவடிக்கை இதுவாகும்.

பாரம்பரியமாக பல வருடமாக திருமணம் முடிந்ததும் ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும் உடையணிந்து கிராம தேவதை கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவோம்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மணமகள் – மணமகன் எவ்வளவு பெரிய செல்வந்தராக அல்லது அதிகாரியாக இருந்தாலும், திருமண நாளன்று பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும் ” என்று தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img