mango tree - 2026

உத்தரப் பிரதேசத்தில் ஒரே மாமரத்தில் 121 வகையான மாங்கனிகள் வளர்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சகரான்பூரில் உள்ள கம்பெனி தோட்டம் என்ற இடத்தில் ஆச்சரியமூட்டும் மாமரம் ஒன்று வளர்ந்துள்ளது.

mango - 2026

வேளாண்மை கல்வி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் இந்த தோட்டத்தில், சுமார் 15 வருடங்களுக்கு முன் 121 வகையான மா மரக்கன்றுகள் ஒன்றாக இணைத்து நடப்பட்டிருந்தது.

mango 2 - 2026

இந்த மரக்கன்றுகளை உத்தரப் பிரதேச வேளாண் பயிற்சி நிலைய இணை இயக்குனர் ராஜேஷ் பிரசாத் என்பவர் நட்டார். ஆய்வுக்காக நடப்பட்ட இந்த மரத்தை பராமரித்து காப்பதற்காக தனியாக ஒரு பணியாளரும் அமர்த்தப்பட்டிருந்தார்.

prakash ram - 2026

தற்போது இந்த மரத்தில் 121 வகையான மாம்பழங்கள் விளைந்துள்ளன. அதாவது ஒரே மரத்தில் தசேரி, லங்கடா, சவுசா, ராம்கீலா, அமர்பாலி, சஹரான்பூர் அருண், சகரான்பூர் வருண், எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் உள்ளிட்ட 121 வகை மாம்பழங்கள் உள்ளன. இந்த அதிசய மரத்தை காண சுற்று வட்டார மக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending