அராஜக அய்யாக்கண்ணுவிடம் ‘பாசம்’ காட்டும் ஊடகங்கள்!: நடந்தது என்ன? நெல்லையம்மாள் விளக்கம்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி

ayyakkannu temple protest - 2026

சென்னை:

தமிழகத்தில் அண்மைக் காலமாக காட்சி ஊடகங்கள் ஒரு சார்பாகவே செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் கண்டு வருகிறார்கள். கட்சிக்கு ஒரு ஊடகம் வைத்துக் கொண்டிருந்த நிலை போய், இப்போது கட்சிகளே ஊடகங்களை விலைக்கு வாங்கி விட்டனவோ என்றபடி, எரிச்சலூட்டும் வகையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பொதுமக்கள்.

இதை உண்மையாக்கும் விதத்தில், திருச்செந்தூரில் நேற்று நிகழ்ந்த ஒரு நிகழ்வு உறுதி செய்திருக்கிறது.

பிரதமர் மோடியைக் குறித்து அவதூறு கிளப்பும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடுத்து விநியோகித்துள்ளார் விவசாயிகள் சங்க நிர்வாகி அய்யாக்கண்ணு. அப்போது உள்ளூர் பாஜக., நிர்வாகி நெல்லையம்மாள் என்பவர், அவரைத் தடுத்து, கோயிலுக்குள் எப்படி நோட்டீஸ் கொடுக்கலாம் என்று கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர், அய்யாக்கண்ணு வலுவில் திணித்த நோட்டீஸை பெற்றுக் கொள்ளாமல் தவிர்த்துச் சென்ற பெண்களை அழைத்து நோட்டீஸ் கொடுக்க, இவர் ஒரு ஃபிராடு, அவர்கிட்ட நோட்டீஸ் வாங்காதீங்க என்று கூறுகிறார் நெல்லையம்மாள்.

உடனே ஆத்திரப்பட்ட அய்யாக்கண்ணு, நெல்லையம்மாளை அடிக்க நாக்கைத் துருத்திக் கொண்டு அடிக்கக் கையை ஓங்குகிறார்… ஆனால் நெல்லையம்மாளும் பதிலுக்கு கையை ஓங்கியுள்ளார். இதனை வீடியோ காட்சிகள் நன்கு தெளிவாக்குகின்றன. இதில், நெல்லையம்மாள் அந்த நோட்டீஸை வாங்காதீங்க, பிராடு என்றுதான் சொன்னாரே ஒழிய, அய்யாக்கண்ணுவை அடிக்கப் பாயவில்லை.

முதலில் அடிக்க கையை ஓங்கியது, ஆணாதிக்கத்தையும் திமிர்த்தனத்தையும் ஒருங்கே கொண்ட அய்யாக்கண்ணுதானே தவிர, நெல்லையம்மாள் இல்லை என்கிறார்கள் அந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள். ஆனால், அய்யாக்கண்ணுவுக்கு ‘விவசாயி’ என்ற பாசத்தைக் கொட்டி பாராட்டி சீராட்டும் ஊடகங்கள், அய்யாக்கண்ணுவைத்தான் அந்தப் பெண் அடித்து விட்டார் என்ற வகையில் செய்தியைப் பரப்பின. .

ஆனால் அது உண்மையில்லை என்று கூறி வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார் நெல்லையம்மாள். அய்யாக்கண்ணுவுடன் வந்த குண்டர்கள் தன்னைத் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்ததாகக் கூறி, தனது புகார் மனுவை போலீஸார் வாங்க மறுத்துவிட்டார்கள் என்று கூறி நெல்லையம்மாள் கூறும் தகவல் இது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.