திமுகவின் தாய் அமைப்பான திராவிடர் கழகம் கூட கருணாநிதியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் திராவிடர் கழக நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை
திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட கருணாநிதியின் மறைவுக்காக தங்கள் கட்சியின் நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு இரத்து செய்வதாக அறிவிக்கவில்லை
ஏன் கருணாநிதி தலைவராக இருந்து ஐம்பது வருடங்கள் வழிநடத்திய அவருடைய கட்சியான திமுகவே அதிகாரபூர்வமாக இப்படி ஒரு அறிவிப்பை இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை!!!
தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌர்ந்தரராஜன் கருணாநிதியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக தமிழக பாஜக நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு இரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்!!!
பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை அதிமுக நாடாளுமன்றத்தில் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டையே அனைத்து நிலைகளிலும் எடுத்து வந்திருக்கிறது…
இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் இறந்த போது அவரது மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தமிழக பாஜக ஏன் அப்போது தங்கள் நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பதாக அறிவிக்கவில்லை?
கருணாநிதி ஜெயலலிதா இருவருமே தமிழக முதல்வராக பதவி வகித்தவர்கள் தான்…
இதில் கருணாநிதி பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகு பண்டாரம் வாஜ்பாய், பரதேசி அத்வானி, ஆக்டோபஸ் மோடி என்று பாஜக தலைவர்களை அநாகரீமாக விமர்சித்தவர்…
ஜெயலலிதாவோ பாஜக தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர்!!
இன்று வரையிலும் பாஜகவின் பிரதான அரசியல் எதிரியான காங்கிரஸின் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என மேடைகள் முழங்கி வருகிறது திமுக!!!
திமுக இளைய வாரிசான கனிமொழியோ ஒருபடி மேலே சென்று பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பை தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அழிக்க வேண்டும என்று பகிரங்கமாக பேசி வருகிறார்!!!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கருணாநிதியின் மறைவுக்காக ஒரு வாரகாலம் தமிழக பாஜகவின் நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவித்ததன் பின்னணி காரணம் என்ன
கருணாநிதி தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்கிற முறையில் அரசியல் நாகரீகம் என்கிற வகையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நலம் விசாரித்ததும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னதும் மனிதாபிமான அடிப்படையில் சரி, அவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியம் அரசியல் நாகரீகத்தின் அடிப்படையில் சரி !!
அதற்காக தமிழக பாஜகவை திமுகவின் கிளை அமைப்பு போல செயல்பட வைப்பது சரியா
தமிழகத்தில் பாஜகவை கட்டமைத்த காலம் சென்ற முன்னாள் பாஜக தேசிய தலைவர் திரு.ஜனா.கிருஷ்ணமூர்த்தி ஜி அவர்களின் பிறந்த தினத்தன்றோ நினைவு தினத்தன்றோ தமிழக பாஜக மாநில தலைவரோ அல்லது கருணாநிதி மீது அளவற்ற அன்பை பொழியும் திராவிட ஆதரவு பாஜக தலைவர்ளோ வெளிப்படுத்தியது உண்டா?
கட்சிக்காகவும், காவி சிந்தனைகளுக்காகவும் உயிர் நீத்த பலிதானிகளுக்கு செய்யாத மரியாதையை கருணாநிதிக்கு செய்யும் தமிழக பாஜக மாநில நிர்வாகத்தை என்ன சொல்வதென்றே தெரியவில்லை
– பாமர நாடோடி #யாரோ?