
திருநெல்வேலி: நாளை.. அதாவது அக்.4ம் தேதி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் போடப்பட்டிருக்கிறது.
இப்போதெல்லாம், பஞ்சாங்கத் தகவல்களையும் ஒரு தகவலாக எடுத்துக் கொண்டு, பலரும் விவாதிப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் இந்த வருடத்தின் பஞ்சாங்கத்தில் தாமிரபரணி நதியில் புஷ்கரம் வருவது, ஆன்மிக நிகழ்வு, வெள்ளப் பெருக்கு இவற்றைக் குறித்து தகவல்கள் உள்ளன.
அதில் குறிப்பிட்ட படி, புரட்டாசி மாதம் 18ம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் நடப்பதால்,பொதுமக்கள் பலர் முந்தி கொண்டு குளிக்க செல்வர். ஆற்றில் வரலாறு காணாத பெரும் வெள்ளம் ஏற்படும்.,அதன் கராணமாக கடுமையான உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது….. என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அக்.3 புதன்கிழமை இன்று காலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இடையிடையே வெயில். பெரும் பாலும் மேக மூட்டமே காணப் படுகிறது.
கடந்த சில தினங்களாக திருநெல்வேலியின் நிலைமை இதுதான். இந்நிலையில் இன்று காலை 10.30 மணி முதல் விடாமல் தூறிக் கொண்டே இருக்கிறது.
தைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.