SANTHEBNATHURI IAS - 2026

தூத்துக்குடி நகரசபை ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் ‘டிக்-டாக்’ வீடியோவை எடுத்து அதை சமூக வளைதங்களில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு… .!

இது தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியின் பார்வையில் படவே வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்

நகர ஊழியர்களின் இந்த டிக் டாக் நடனம் ஆனது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் நகரசபையில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர் ஒருவர் ஓய்வு பெறுவதால் அவருக்கு நகரசபை அலுவலகத்தில் பிரிவுஉபசார விழா ஒன்று நேற்று முன்தினம் நடந்ததுள்ளது.

.விழாவானது பணியாளா்களின் வேலை நேரத்தில் நடந்துள்ளது. விழாவில் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருந்துள்ளனர்.

இதனை நகரசபை பணியாளா்கள் சிலர் தங்களது செல்போனில் பதிவேற்றி வைத்துள்ள டிக்-டாக் செயலியில் தங்களது ஆனந்த நடனத்தை வீடியோ எடுத்து பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

அவர்கள் வெளியிட்ட வீடியோவில் ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்வது போன்றும் சினிமா வசனங்கள் இணைக்கப்பட்டு கேலி செய்வது போலவும் நடிகர் வடிவேலு பேசுவது போன்ற வசனங்கள் இணைக்கப்பட்டும் இதற்கு ஒரு படி மேலே இந்த ஊழியர்தான் தாஜ்மகாலை கட்டியது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது இந்த ஊழியர் என்று பணி நேரத்தில் கும்மாளம் போட்டுள்ளனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொது மக்கள் இந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தோம் மக்கள் பணியை விட டிக்-டாக்’ வீடியோ எடுத்து வெளியிடுவதிலேயே நகர மன்ற பணியாளா்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினர்

.நாங்கள் பிறப்பு சான்றிதழ் என்று அடிப்படை சான்றிதழ் போன்ற பல தேவைகளுக்கு நகரசபை அலுவலகத்துக்கு சென்றால் எங்களை வீணாக அங்கு இங்கு என்று அலைக்கழிக்கிறார்கள்.

கொஞ்சம் நேரம் தவறினால் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் ஆனால் இவர்கள் மட்டும் பணி நேரத்தில் பணியை செய்யாமல் வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர் என்று ஆதங்கம் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending