ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஆன்மீக கேள்வி பதில் - பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்குப் பிறகு பிள்ளையாரை...

ஆன்மீக கேள்வி பதில் – பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்குப் பிறகு பிள்ளையாரை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?

-

- Advertisment -

சினிமா:

நடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்! வைரல் வீடியோ!

அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!

தலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்!

அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்

சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!

சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-Advertisement-

தில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு! அஜித் தோவல் ஆலோசனை!

#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா?

தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.

வீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை!

அவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சிகரம் சின்னதாகப் போகுமா? சிகரத்தை நோக்கி கைகூப்புவோம் !

வெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு! 90 % உமக்கு! மாட்டிய கருணா பால் விகாஸ்! மதமாற்றத்துக்கு அள்ளிவிட்டது அம்பலம்!

கருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது

தில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு! அஜித் தோவல் ஆலோசனை!

#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை!

அவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சிகரம் சின்னதாகப் போகுமா? சிகரத்தை நோக்கி கைகூப்புவோம் !

ஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது!

பட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை!

எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா?

சர்வர் கோளாறாம்..! தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்!?

எனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...

ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு!

திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.

ஊடகங்கள் பார்வையில் வீரப்பன்! அன்று போராளி! இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’!

வித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்!

இவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க? அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…!?

மோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்?

பிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்!

எஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.
- Advertisement -
- Advertisement -

விநாயக சதுர்த்தி பூஜைக்குப் பிறகு கணபதியை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?

பதில்:- மண்ணால் செய்த எந்த தெய்வ மூர்த்தியானாலும் பூஜைக்கு பிறகு நீரில் கரைத்துவிட வேண்டும். உலோகத்தால் செய்த பிரதிமையாக இருந்தால் ஆவாஹனம் செய்து வழிபட்ட பின் மீண்டும் ப்ரோக்ஷணம் போன்றவற்றைச் செய்து பூஜையை தொடங்கலாம்.

ஆனால் மண்ணால் சிலை செய்த போது தீட்சை காலம் என்று விதித்துக் கொள்ளும் பட்சத்தில் அதாவது ஒன்பது நாட்களோ முப்பது நாட்களோ பூஜை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டால் அத்தனை நாட்களும் அந்த ஒரே மண் சிலையையே நாம் பூஜை வழிபாடு செய்கிறோம். தீட்சை முடிந்து அதை நிமஞ்ஜனம் செய்து தீரவேண்டும். அதாவது நீரில் கரைத்து விட வேண்டும்.

மண்ணால் செய்த சிவலிங்கத்தை ‘பார்த்திவ லிங்கார்ச்சனை’ செய்த பின் அந்த பார்த்திவ லிங்கத்தை நீரில் கரைக்கிறோம். வட இந்தியாவில் கல்கத்தா ஒரிசா போன்ற மாநிலங்களில் பிள்ளையார் சதுர்த்தி போலவே மண்ணால் செய்த துர்காதேவியை நவராத்திரி வழிபாட்டின்போது பூஜை செய்வார்கள். அவற்றையும் கூட ஒன்பது நாள் பூஜைக்கு பின் நீரில் கரைத்து விடுவார்கள். இது நம் கலாச்சார வழிமுறையில் உள்ள சிறப்பான அம்சம்.

எதற்காக மண்ணால் செய்ய வேண்டும்? நீரில் கரையும் இயல்பு மண்ணிற்கு மட்டுமே உள்ளது. அது மட்டுமல்ல. எப்படிப்பட்ட மண் உபயோகிக்க வேண்டும்? நீரில் கரையக் கூடியதாகவும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாமலும் உள்ள மண்ணையே விநாயகர் சிலை செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என்று ரிஷிகள் தெளிவு படுத்தியுள்ளார்கள். இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஹிந்து தர்மத்தில் எந்த ஒன்றும் இயற்கையையும் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்த கூடியது அல்ல. அப்படிப்பட்ட ஏதாவது தென்பட்டது என்றால் அது பின்னாட்களில் செயற்கையாக ஏற்பட்டதாக இருக்குமே தவிர உண்மையான சம்பிரதாயத்தில் அவ்வாறு இல்லை.

மேலும் விநாயகர் சிலைகள் கூட மிகப் பெரியவையாக செய்து வழிபட வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. மண்ணால் செய்த சிலை கூட ஓரளவுக்கு அளவோடு கூடியதாக இருக்க வேண்டுமே தவிர பல அடி உயரம் உள்ளதாக செய்து வைக்கச் சொல்லி எங்கும் கூறவில்லை. அதற்கு வண்ணம் பூசச் சொல்லி சாஸ்திரம் கூறவில்லை. மண்ணால் சிலை செய்து பூஜித்து வழிபடு என்று மட்டுமே கூறியுள்ளது. அழகுக்காக மஞ்சள் குங்குமம் இட்டு விட்டால் அதுவே நல்ல அலங்காரம்… நல்ல வண்ணம்!

ஆனால் நம் திருப்திக்காக நிறங்களைக் கலப்பதைப் பார்க்கிறோம். செயற்கை நிறங்கள் கலப்பது நல்லதல்ல. மூலிகைகள் இலைகள் பூக்கள் இவற்றை கொண்டு இயற்கையில் கிடைக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.

பிள்ளையார் சிலை நான்கு கைகளோடு கூடியதாக இருக்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும் விதம் முதலானவை சாஸ்திரங்கள் கூறியுள்ள முறைப்படி மண் விநாயகரை தயாரிக்க வேண்டும்.

மண் கணபதியை நீரில் கரைப்பதன் பின்னால் யோக சாஸ்திரப்படி ஒரு காரணம் உள்ளது. யோகத்தில் ‘பஞ்சீகரணம்’ என்று ஒரு வழிமுறை உள்ளது. அதனை குரு முகமாக உபதேசம் பெற்று செய்ய வேண்டும். முதலில் நமக்குள் உள்ள ப்ருத்வி தத்துவத்தை ஜல தத்துவத்தில் லீனம் செய்வது. ஜல தத்துவத்தை அக்னி தத்துவத்தில் லீனம் செய்வது. அக்னியை வாயு தத்துவத்திலும் வாயு தத்துவத்தை ஆகாய தத்துவத்திலும் லீனம் செய்வது. இந்த ஐந்தையும் புத்தி தத்துவத்தில் லீனம் செய்து அதனை பரமாத்மாவிடம் ஐக்கியம் செய்வது என்பது யோகக் கிரியை. இது ஒரு வாக்கியத்தில் கூறி விடுவதைப் போல எளிதான செயல் அல்ல. முறையோடு பயின்று கடைபிடிக்க வேண்டிய யோகக்கிரியை.

அவற்றுக்குத் தொடர்பான ஸ்தானங்கள் நம் உடலில் உள்ளன. பிரதிவி தத்துவம் என்பது மூலஸ்தானம். கணபதி மூலாதாரத்திற்கு அதிபதி. இதன் மூலம் இன்னும் ஒரு விஷயம் கூட நமக்குத் தெரிகிறது. அது என்னவென்றால் நம் பூஜை விதானங்கள் யாரோ சிலர் நம்பிக்கைக்காக ஏற்படுத்தியவை அல்ல. அவை ஒன்றுக்கொன்று இணைந்துள்ள வழிமுறைகள்.

முதலில் வழிபாடு பெறும் கணபதிக்கும் யோக சாஸ்திரத்திற்கும் அனுபந்தம் உள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. “த்வம் மூலாதாரே ஸ்திதோஸி நித்யம்…!” என்று ‘கணபதி அதர்வசீர்ஷம்’ கூறுகிறது.

இதே கருத்தை முத்துஸ்வாமி தீக்ஷதர் “மூலாதார க்ஷேத்ர ஸ்திதம் பராதிசத்வாரி வாகாத்மகம் ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்…” என்று வாதாபி கணபதி கீர்த்தனையில் துதிக்கிறார்.

மூலாதாரம் ப்ருத்வி ஸ்தானம். வரிசையாக சுவாதிஷ்டானம் மணிபூரகம் அனாகதம்… எல்லாம் கூட பஞ்ச பூதங்களில் மீதி உள்ள பூதங்களின் ஸ்தானங்கள். அதிலும் இன்னுமொரு ஆச்சரியம் அளிக்கும் செய்தி என்னவென்றால் யோகத்தில் முதலில் உள்ளது மூலாதாரம். பூஜைகளில் முதலிடம் கணபதிக்கு. இதன் மூலம் கணபதி பூஜைக்கும் யோக சாஸ்திரத்திற்கும் தொடர்பு உள்ளதை அறியலாம்.

நாம் கணபதியை வழிபடுவதால் நமக்குத் தெரியாமலேயே மொத்தம் குண்டலினி சக்திக்கு ஆதாரமான மூலாதாரம் தூண்டப்படுகிறது. இது அதிலுள்ள சிறப்பு.

மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதியின் சைதன்யத்தை ஆன்மீக சாதனை மூலம் அடுத்த சக்கரத்தில் லயம் செய்கிறோம். இந்த யோகச் செயலையே பௌதீகமாக மண்ணால் செய்த கணபதி உருவத்தை நீரில் கரைக்கும் செயலாகக் காண்கிறோம். இது ஸ்தூலத்தை சூட்சுமமாக மாற்றும் ஒரு சிறப்பான செயலாக்கம். வெளிப்படையாக நாம் செய்யும் ஒரு வழிபாடு இவ்விதம் சூட்சும சக்தியாக மாறுகிறது.

இன்னுமொரு ரகசியம் என்னவென்றால் நாம் விக்ரகத்தில் தெய்வத்தை வழிபடுவோமே தவிர விக்ரகம் மட்டுமே தெய்வம் என்று நினைப்பதில்லை. இது குறித்து சுவாமி விவேகானந்தர், “விக்ரகத்தை தெய்வமாக பாவனை செய்து வழிபடு! ஆனால் விக்கிரகமே தெய்வம் என்று எண்ணாதே!” என்று கூறுகிறார்.

அதனால்தான் நம் பூஜைகளில் ஆவாஹனம் என்று ஒரு வழிமுறை உள்ளது. ஆவாஹனம் என்றாலே அதுவரை இல்லாத ஒன்றை அதில் ஏற்றுகிறோம் என்று பொருள். நாம் தூய்மையான முறையில் அமர்ந்து மந்திரத்தின் உதவியோடு தெய்வசக்தியை பிரவேசிக்க செய்கிறோம். அதன் பின் அதனை தெய்வமாக வழிபடுகிறோம். வழிபட்டபின் எந்த விஸ்வ வியாபகமான எங்கும் பரந்துள்ள சைதன்யத்தை பாவனையின் பலம் மூலம் சப்த சக்தியான மந்திரத்தின் உதவியோடு அதில் ஆவாகனம் செய்தோமோ, அதனை ஷோடசோபசார பூஜை அல்லது அவரவர் சக்திக்கேற்ப அர்ச்சனை செய்கிறோம். அவ்விதம் வணங்கப்பட்ட சைதன்ய சக்தி அந்த விக்ரகத்தில் நிறைகிறது. முடிவில் வழிபாடுகளும் ஆராதனையும் பூர்த்தியானபின் அதனை நாம் ‘உத்வாசனம்’ செய்கிறோம். அதுவரை வழிபாடு செய்யப்பட்ட ஈஸ்வர சக்தியை நம் இதயத்துக்குள் பிரவேசிக்கச் செய்வதே ‘உத்வாசனை’. வழிபட்ட தெய்வீக சக்தியை வேறு எங்கோ அனுப்ப மாட்டோம். நம் உள்ளத்திற்குள் எடுத்துச் செல்கிறோம்.

அப்போது என்ன நிகழ்கிறது? அதுவரை பூஜை செய்த தெய்வீக சக்தி நம்முள் நுழைந்தபின் அதற்கு ஆதாரமாக இருந்த சிலை வெறும் பொம்மையாக மாறுகிறது. அதனை என்ன செய்வது? மீண்டும் அதனை நிமஞ்ஜனம் அதாவது நீரில் கரைக்க வேண்டும். தாதுக்கள், உலோகங்கள் போன்றவற்றால் செய்த சிலை என்றால் புரோக்ஷணம் போன்றவற்றை செய்து மீண்டும் பயன்படுத்தலாம். மண்ணால் செய்த பொம்மைகளை ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அதனால் நீரில் அதனை நிமஞ்ஜனம் செய்கிறோம்.

ஏனென்றால் அதுவரை பவித்திரமாக இறைசக்தியை அதில் வைத்திருந்தோம். அதே புனிதமான பாவனையோடு அந்தச் சிலையை நீரில் கரைக்கிறோம். இதனைக் கொண்டு ஹிந்துக்கள் விக்கிரக ஆராதனை செய்பவர்கள் அல்லர்…! விக்ரகத்தில் ஆவாஹனம் செய்து ஆராதிப்பவர்கள் என்ற கருத்து தெளிவாக வெளிப்படுகிறது. இத்தகைய உயர்ந்த தத்துவம் நிமஞ்ஜனம் என்ற செயலில் மறைந்துள்ளது. இதனைப் புரிந்து கொண்டு செய்தால் வேறுபாடாக கருதாமல் அழகான சாத்வீகமான கருத்தை அறிந்து கொள்ள முடியும்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,973FansLike
216FollowersFollow
776FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி!

பச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

கேரள சமையல்: பலாக்காய் மசால்!

வேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.

கேரள சமையல்: அடை பிரதமன்!

தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது!
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |