ஆன்மிகம் ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்: பெரியவா

ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்: பெரியவா

-

- Advertisment -

சினிமா:

இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர்! ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க?!

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!

இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.

ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.
-Advertisement-

வெத்துவேட்டு வெங்காய அரசியல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.

ரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்!

அவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!

தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

பாவம்..! ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்!

கோவிலுக்கு மாலை போட்டிருந்த பள்ளி மாணவனை பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்திய ஆசிரியர் ... ஆசிட் கையில் கொட்டி மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உறவினர்கள் பள்ளியை முற்றுகை!

உள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..!

மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளதால், மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்...

நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியவில்லை! வெளியுறவுத் துறை விளக்கம்!

புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு; மற்ற பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளோம்! நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

டிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், 50 பெண்கள் உட்பட 261பேர் கைது செய்யப் பட்டனர்.

புளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு!

தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியில் ஹபிப் என்பவரின் எலுமிச்சைத் தோட்டத்தில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கண்டறியப் பட்டது.

தீபத் திருவிழாவுக்கு இதை எல்லாம் கொண்டு வந்தால்… உங்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுமாம்!

ஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.!

இந்த நிலையில் நேற்று மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக தொங்கினார்.

‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்!

இது சரியாக அதிகாலை 4.45 மணி முதல் 6.15 மணிக்குள் நடந்தது. அவர்கள் 4 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது 10க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு சென்றனர்.

அடடே…! நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்!

நித்தியானந்தா தனித்தீவு வாங்கியதாகவும் ஈக்வடார் உதவியதாகவும் வந்த செய்திகள் உண்மை யில்லை என்று அந்நாட்டு தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

வெத்துவேட்டு வெங்காய அரசியல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.
- Advertisement -
- Advertisement -

“என்னிடம் ஒண்ணுமேயில்லை; நான், .அகிஞ்சனன்.”……..(ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்) பெரியவா

(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்ட பிறகு (பெரியவா) நடந்த சம்பவம்)

‘பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்’ ?

சொன்னவர்-பிரும்மஸ்ரீ டி.எஸ்.நடராஜ சாஸ்திரிகள் …………………………(ஸ்தானீகர்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமடத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் நித்யபூஜை,விசேஷ பூஜை,உற்சவம் எல்லாம் ஒழுங்காக நடைபெறவேண்டுமே? அந்தக் காலத்தில் ஸ்ரீமடம் நிர்வாகத்திலிருந்த பல கோவில்களில் பொருளாதாரம் வரவு-சிலவுக்கு ஈடுகட்ட முடியாத நிலையில் தான் இருந்தது. ஸ்ரீபுதுப்பெரியவாள் இந்தத் துறையில் கவனம் செலுத்தினார்கள். ‘ஸ்ரீபங்காரு காமாக்ஷி அம்மன் நித்ய பூஜா டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கினார்கள்.அந்த அறக்கட்டளையின் முழு விவரத்தையும், மகாப்பெரியவாளிடம் விண்ணப்பித்து அவர்கள் இசைவைப் பெற்றுக்கொண்டு வரும்படி பணித்தார்கள், புதுப் பெரியவாள்.

டிரஸ்ட் நிர்வாகிகளுடன், ஸ்ரீ அம்மன் பிரசாதம் எடுத்துக் கொண்டு நானும் செல்லவேண்டும் என்று உத்திரவாயிற்று.

மகாப் பெரியவாள் ஷோலாப்பூர் அருகில் ஒரு கிராமத்தில் முகாம். முகாம் இருப்பிடத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு சென்றோம். பெரியவாள் முன்னிலையில் நின்றோம்.

அணுக்கத் தொண்டர்,சற்று பெரிய குரலில் கூறினார்.

‘தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா. ஸ்தானிகர் பிரஸாதம் கொண்டு வந்திருக்கார்…’

‘முதலில் பிரசாதம் கொடு’-என்று சமிக்ஞை.

ஒரு மூங்கில் தட்டில், ஒரு சாதரா,வாடிப்போன நிர்மால்ய மாலை,புஷ்கலமாகக் குங்குமம்.

குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு, மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள்.

“இன்னும் என்ன இருக்கு..”

‘அம்பாள் பிரசாதமாக, ஒரு சால்வை..’

மகாபெரியவா கண்களில் ஒரு தேஜஸ். நெஞ்சில் ஏதோ நினைவோட்டம்.

“ஸ்தானீகரைக் கூப்பிடு..”

நான் சற்று அருகே சென்றேன். பாதாதிகேசம் அருட்புனலால் ஒரு நீராட்டு.

“நீ….சங்கரசாஸ்திரிகள் புத்திரன் தானே?.

‘ஆமா..’

“என்ன ஒற்றுமை பார்! நான் பட்டத்துக்கு வந்தபோது ,அவர்தான் சாதரா கொண்டு வந்து, பூவாலேயே அபிஷேகம் பண்ணி… ஹ்ம்?.. அப்புறம் பிரசாதம் கொடுத்தார். மடத்தின் மூலமா, அவருக்குப் பதில் மரியாதை கூடப் பண்ணினோம். ..தெரியுமோ?….”

‘அப்பா சொல்லியிருக்கார்…’

யுகமாகக் கழிந்த இரு விநாடிகள்.

“நீயும் அவரைப்போலவே…சாதரா,நிர்மால்யம், குங்குமம் கொண்டு வந்திருக்கே. உனக்கும் பதில் மரியாதை செய்யணும்… ஆனா.. என்னிடம் ஒண்ணுமேயில்லை; நான், அகிஞ்சனன். (ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்..)

(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டபடியால், இவ்வாறு கூறினார்கள்.)

மௌன இடைவெளி.

“இவனுக்கு,ஒரு முத்திரைப்பவுன் வாங்கி பதில் மரியாதை செய்தால், தேவலை. உங்களால் யாராலேயாவது முடியுமோ?…”

அந்த கிராமத்தில் நகைக்கடை ஏது?

சில மாதர்கள் நகைகளைக் கழற்றிக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால்,பெரியவாள் முத்திரைப் பவுன் அல்லவா,கேட்கிறார்கள்.?

இந்தப் பரபரப்பில்,எனக்கு அழுகையே வந்து விட்டது. ‘பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்’ என்று மனம் பரிதவித்தது.
கண்ணீர் விட்டபடியே நமஸ்காரம் செய்தேன்.

‘பெரியவாளோட அனுக்ரஹம் எங்களுக்கு இருந்தால் போதும்..காமாக்ஷி கருணையிலே நாங்கள் எல்லாம் சௌக்கியமாகவே இருக்கோம். விம்மினேன், பெரியவா பரிவுடன் கடாக்ஷித்தார்கள்.

“இதே எண்ணத்தோடே இருந்து கொண்டிரு. கடைசிவரை க்ஷேமமாய் இருப்பாய்…”

ஆனால்,பெரியவாள் வெற்றுச் சொல்லுடன் நின்றுவிடவில்லை.முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தனிகரிடம் சொல்லி, விரைவில் முத்திரைப் பவுன் அனுப்பிவைத்தார்கள்.

ஸ்தானீர்களாய நாங்கள் பங்காரு காமாக்ஷிக்கும் பரமாசார்யாளுக்குமிடையே, எந்த ஒரு பேதத்தையும் காண்பதில்லை….

Sponsors
Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,942FansLike
174FollowersFollow
723FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |