“எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா, மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது.நாங்க இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப் பள்ளியிலேயே இருக்கோம்னு”– வெளிநாட்டு பெண்மணிகள்

 

-(இந்து மதத்தைப் பற்றி படிச்சுத் தெரிஞ்சுண்டு அதுலயே ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கிய வெளிநாட்டு பெண்மணிகள்-பெரியவா பற்றி சொன்னது மேலே)

 

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
நன்றி-குமுதம் பக்தி- (சுருக்கம்)

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 

1967 வாக்குல ஒருநாள் பெரியவா தரிசனம் பண்றதுக்காக வந்திருந்தார் ஒரு பக்தர் மடத்துக்கு அடிக்கடி வர்றவர். நிறைய கைங்கரியம் எல்லாம் செய்யறவர். அதோட ஆசார்யா மேல அபாரமான பக்தி உள்ளவர்ங்கறதால மடத்துல எல்லாருக்குமே அவரைத் தெரியும்.

 

மடத்துக்கு அவர் வந்திருந்த அன்னிக்கு ஆசார்யாளை தரிசிக்க நிறையவே கூட்டம் இருந்தது.ஆனா,பெரியவா வழக்கமா தான் அமர்ந்து தரிசனம் தர்ற அறைக்கு வரவே இல்லை. அதுக்கு பதிலா கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து வெளிநாட்டுப் பெண்கள் ரெண்டுபேரோடு பேசிண்டு இருந்தார்.

 

வழக்கமான நேரத்தைவிட ஒரு மணி நேரம் கூடுதலா ஆச்சு. கூட்டத்துல சிலர்,மெதுவா முணு முணுக்க ஆரம்பிச்சா. அடுத்து ரெண்டு மணி நேரம் நகர்ந்தது.கொஞ்சம் சத்தமாகவே பேசிக்க ஆரம்பிச்சா எல்லாரும்.

அந்த சமயத்துல மடத்துக்கு வழக்கமா வரக்கூடிய அந்த பக்தர் கொஞ்சம் படபடப்பாவே ஆயிட்டார்.

 

“என்ன இது..பரமாசார்யா அந்த வெளிநாட்டுக்காரிகளோட இவ்வளவு நேரம் பேசிண்டு இருக்காரே.அவாள்லாம் நம்ப கலாசாரத்தையே இழிவா பேசறவாளாச்சே .அவாளுக்கு எதுக்கு இத்தனை நாழி தரிசனம் தரணும்? .பெரியவாளையே தெய்வமா நினைச்சு நாங்க எல்லாரும் காத்துண்டு இருக்கறச்சே. .அவாளுக்குப் போய் உபதேசம் செஞ்சுண்டு இருக்காரே!” அப்படின்னெல்லாம் கொஞ்சம் உரக்கவே பேச ஆரம்பிச்சுட்டார்.

 

ஒருவழியா வெள்ளைக்காரிகளோட பேசி முடிச்சுட்டு வந்தார் பரமாசார்யா.அவர் வந்ததும் சட்டுன்னு எல்லாரும் வாயைப் பொத்திண்டு பவ்யமா இருக்கிறமாதிரி மாறிட்டா.இதெல்லாம் ஆசார்யாளுக்குத் தெரியாதா என்ன? அதனால அவர் வந்ததும் தன்னோட பக்கத்துல நின்னுண்டிருந்த அணுக்கத் தொண்டரை கூப்பிட்டார்.

“இந்த இங்கிலீஷ்காரிகள் அப்படி என்ன பெருசா பண்ணிட்டா? அவாளுக்கு எதுக்கு உபதேசம்னு, இங்கே பலருக்கு தோண்றாப்புல இருக்கு. அதனால வந்தவா யாரு? அவாகூட என்ன பேசினேங்கறதை நீயே சொல்லிடு” அப்படின்னார்.

 

தொண்டர் சொல்கிறார்;

“மகாபெரியவாளை தரிசனம் பண்ணி அவரோட உபதேசத்தைக் கேட்கறதுக்காக ஜெர்மனியல இருந்து வந்திருந்தா அந்த ரெண்டு பெண்களும். இன்னிக்கு பரமாசார்யா அவாளோட பேசினதை எல்லாரும் பார்த்தேள்.ஆனா,அவா மடத்துக்கு வந்து மூணு நாள் ஆச்சு.மூணு நாளைக்கு முன்னால அவா வந்ததும் பரமாசாரியார் கிட்டே போணும்னு சொன்னா. அப்போ அவா ரெண்டுபேரையும் பார்த்து ‘ஜஸ்ட் வெயிட்!’னு சொல்லிட்டு நகர்ந்து போயிட்டார் பெரியவா.

 

“அப்படி அவர் சொன்னப்போ அவா எங்கே நின்னுண்டு இருந்தாளோ அதே இடத்துல உட்கார்ந்துண்டு ருத்ர ஜபம் பண்ணிண்டு இருந்தா .ரெண்டொரு தரம் மடத்துல இருந்து குடுத்த பாலும்,பழமும் மட்டும் சாப்டுட்டு விரதம் மாதிரி உட்கார்ந்துண்டு இருந்தா.
“ஒருவேளை பெரியவா மறந்திருப்பாரோங்கற எண்ணத்துல அவர்கிட்டே நினைவு படுத்துட்டுமான்னு நானே இவாகிட்டே கேட்டேன் .ஆனா, என்ன சொன்னா தெரியுமா?
“அவர் பெரிய மகான்.மறதியெல்லாம் அவருக்கு வரவேவராது எங்களுக்கு எப்போ உபதேசம் பண்ணணும்கறது அவருக்குத் தெரியும். கண்டிப்பா அவரே கூப்பிடுவார். நீங்க யாரும் அவரைத் தொந்தரவு பண்ண வேண்டாம்” அப்படின்னு இங்க்லீஷ்ல சொன்னா.
“மூணு நாளைக்கு அப்புறம் இன்னிக்குத்தான் அவாளோட பேசியிருக்கார் ஆசார்யா. அவா ரெண்டுபேரும் நம்மளோட இந்துமதத்தைப் பத்தியும், வேதபுராணங்கள் ,பண்பாடு இதையெல்லாமும் அமெரிக்காவுல உள்ள ஒரு பல்கலைக்கழகத்துல படிச்சுத் தெரிஞ்சுண்டு அதுலயே ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா.
அதேசமயம் நாங்கள் முழுசா தெரிஞ்சுண்டுட்டோமா? இல்லை இன்னமும் பாக்கி இருக்கான்னு தெரியாம, அமெரிக்க நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கிட்டே விளக்கம் கேட்டிருக்கா.அதுக்கு அதை நாமள்லாம் தீர்மானிக்க முடியாது. உங்களோட சந்தேகத்துக்கெல்லாம் விளக்கம் சொல்லக்கூடியவர் இந்தியாவுல காஞ்சி காமகோடி மடத்து ஆசார்யாள இருக்கிற பரமாசார்யார் மட்டும்தான். அவர்கிட்டேயே போய்க் கேளுங்கோ!”ன்னு சொல்லியிருக்கா அந்த அமெரிக்க பேராசிரியர்கள்.

அவாளுக்கு உபதேசம் பண்ணக்கூடிய சரியான ஞானி நம்ப பெரியவா மட்டும்தான்கறதை தெரிஞ்சுண்டு, அவரோட பேசி தங்களோட சந்தேகத்தை கேட்டுக்கத்தான் வந்திருந்தா அவா வந்தவா, மூணுநாளா காத்துண்டு இருந்தும் ஒரு கிஞ்சித்தும் முணுமுணுக்கலை சலிச்சுக்கலை .பெரியவா மேல் அவ்வளவு பக்தி!” அந்தத் தொண்டர் சொல்லி முடிச்சு அதேசமயத்துல பிரசாதம் வாங்கிண்டு புறப்படறதுக்காக மறுபடியும் பெரியவா முன்னால வந்தா அந்த வெளிநாட்டுப் பெண்கள்.

 

கூட்டத்துலஒருத்தர்,”மகாபெரியவாளைப் பத்தி உங்களோட அபிப்ராயம் என்ன?” அப்படின்னு அந்தப் பெண்கள்கிட்டே இங்கிலீஷ்ல கேட்டார்.

 

“பிஃபோர் வீ மெட் ஹிஸ் ஹோலினஸ்..னு தொடங்கி ஆங்கிலத்துல அவா சொன்னது என்ன தெரியுமா?

இந்த மகாபுருஷரை தரிசனம் பண்றதுக்கு முன்னாலவரைக்கும் எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா,மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது. நாங்க இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப் பள்ளியிலேயே இருக்கோம் அப்படிங்கறது. இந்தப் புண்ணியசீலரை தரிசிக்காம இருந்து இவ்வளவு நாளை வீணடிச்சுட்டோமேன்னு தோணறது. எங்களோட ஆன்மா இப்போதான் ஆனந்த நிலைன்னா என்னங்கறதை தெரிஞ்சுண்டு. இருக்கு. இந்த மகான் இருக்கிற பூமிக்கு வந்தோம்.அவரை தரிசித்தோம்.அவரோட பேசினோம்கறதே எங்களுக்கு கிடைச்ச மகாபாக்யம்?” அப்படின்னு சொன்ன அவா கண்ணுல இருந்து ஆனந்த பாஷ்பம் தாரை தாரையா வழிஞ்சுது.

 

மகா பவ்யமா பெரியவாளைக் கும்பிட்டுட்டு பிரசாதத்தை வாங்கிண்டு புறப்பட்டா அவா ரெண்டுபேரும்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...