“எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா, மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது.நாங்க இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப் பள்ளியிலேயே இருக்கோம்னு”– வெளிநாட்டு பெண்மணிகள்
-(இந்து மதத்தைப் பற்றி படிச்சுத் தெரிஞ்சுண்டு அதுலயே ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கிய வெளிநாட்டு பெண்மணிகள்-பெரியவா பற்றி சொன்னது மேலே)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1967 வாக்குல ஒருநாள் பெரியவா தரிசனம் பண்றதுக்காக வந்திருந்தார் ஒரு பக்தர் மடத்துக்கு அடிக்கடி வர்றவர். நிறைய கைங்கரியம் எல்லாம் செய்யறவர். அதோட ஆசார்யா மேல அபாரமான பக்தி உள்ளவர்ங்கறதால மடத்துல எல்லாருக்குமே அவரைத் தெரியும்.
மடத்துக்கு அவர் வந்திருந்த அன்னிக்கு ஆசார்யாளை தரிசிக்க நிறையவே கூட்டம் இருந்தது.ஆனா,பெரியவா வழக்கமா தான் அமர்ந்து தரிசனம் தர்ற அறைக்கு வரவே இல்லை. அதுக்கு பதிலா கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து வெளிநாட்டுப் பெண்கள் ரெண்டுபேரோடு பேசிண்டு இருந்தார்.
அந்த சமயத்துல மடத்துக்கு வழக்கமா வரக்கூடிய அந்த பக்தர் கொஞ்சம் படபடப்பாவே ஆயிட்டார்.
“என்ன இது..பரமாசார்யா அந்த வெளிநாட்டுக்காரிகளோட இவ்வளவு நேரம் பேசிண்டு இருக்காரே.அவாள்லாம் நம்ப கலாசாரத்தையே இழிவா பேசறவாளாச்சே .அவாளுக்கு எதுக்கு இத்தனை நாழி தரிசனம் தரணும்? .பெரியவாளையே தெய்வமா நினைச்சு நாங்க எல்லாரும் காத்துண்டு இருக்கறச்சே. .அவாளுக்குப் போய் உபதேசம் செஞ்சுண்டு இருக்காரே!” அப்படின்னெல்லாம் கொஞ்சம் உரக்கவே பேச ஆரம்பிச்சுட்டார்.
“இந்த இங்கிலீஷ்காரிகள் அப்படி என்ன பெருசா பண்ணிட்டா? அவாளுக்கு எதுக்கு உபதேசம்னு, இங்கே பலருக்கு தோண்றாப்புல இருக்கு. அதனால வந்தவா யாரு? அவாகூட என்ன பேசினேங்கறதை நீயே சொல்லிடு” அப்படின்னார்.
“மகாபெரியவாளை தரிசனம் பண்ணி அவரோட உபதேசத்தைக் கேட்கறதுக்காக ஜெர்மனியல இருந்து வந்திருந்தா அந்த ரெண்டு பெண்களும். இன்னிக்கு பரமாசார்யா அவாளோட பேசினதை எல்லாரும் பார்த்தேள்.ஆனா,அவா மடத்துக்கு வந்து மூணு நாள் ஆச்சு.மூணு நாளைக்கு முன்னால அவா வந்ததும் பரமாசாரியார் கிட்டே போணும்னு சொன்னா. அப்போ அவா ரெண்டுபேரையும் பார்த்து ‘ஜஸ்ட் வெயிட்!’னு சொல்லிட்டு நகர்ந்து போயிட்டார் பெரியவா.
அவாளுக்கு உபதேசம் பண்ணக்கூடிய சரியான ஞானி நம்ப பெரியவா மட்டும்தான்கறதை தெரிஞ்சுண்டு, அவரோட பேசி தங்களோட சந்தேகத்தை கேட்டுக்கத்தான் வந்திருந்தா அவா வந்தவா, மூணுநாளா காத்துண்டு இருந்தும் ஒரு கிஞ்சித்தும் முணுமுணுக்கலை சலிச்சுக்கலை .பெரியவா மேல் அவ்வளவு பக்தி!” அந்தத் தொண்டர் சொல்லி முடிச்சு அதேசமயத்துல பிரசாதம் வாங்கிண்டு புறப்படறதுக்காக மறுபடியும் பெரியவா முன்னால வந்தா அந்த வெளிநாட்டுப் பெண்கள்.
கூட்டத்துலஒருத்தர்,”மகாபெரியவாளைப் பத்தி உங்களோட அபிப்ராயம் என்ன?” அப்படின்னு அந்தப் பெண்கள்கிட்டே இங்கிலீஷ்ல கேட்டார்.
“பிஃபோர் வீ மெட் ஹிஸ் ஹோலினஸ்..னு தொடங்கி ஆங்கிலத்துல அவா சொன்னது என்ன தெரியுமா?
இந்த மகாபுருஷரை தரிசனம் பண்றதுக்கு முன்னாலவரைக்கும் எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா,மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது. நாங்க இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப் பள்ளியிலேயே இருக்கோம் அப்படிங்கறது. இந்தப் புண்ணியசீலரை தரிசிக்காம இருந்து இவ்வளவு நாளை வீணடிச்சுட்டோமேன்னு தோணறது. எங்களோட ஆன்மா இப்போதான் ஆனந்த நிலைன்னா என்னங்கறதை தெரிஞ்சுண்டு. இருக்கு. இந்த மகான் இருக்கிற பூமிக்கு வந்தோம்.அவரை தரிசித்தோம்.அவரோட பேசினோம்கறதே எங்களுக்கு கிடைச்ச மகாபாக்யம்?” அப்படின்னு சொன்ன அவா கண்ணுல இருந்து ஆனந்த பாஷ்பம் தாரை தாரையா வழிஞ்சுது.



