ஜாதகத்தில் ராகு-கேது: கல்யாண யோகம் எப்போது?

ராகு கேது என்றாலே ஒரு பயம் தான் எல்லோருக்கும் காரணம் அது இருக்கும் இடத்தை குழப்பி விடும் என்பது பொது.
ஆனால் கோச்சாரத்தில் ராகு- கேது இருக்கும் ராசியை குரு,சுக்ரன், புதன் பார்த்தாலும், அல்லது சேர்ந்தாலும், அல்லது ஒருவரின் ஜனன ராசிக்கு 2,3,5,6.9,11 இந்த இடங்களில் கோச்சாரத்தில் ராகு அல்லது கேது வந்தாலும் கல்யாண யோகம் உண்டாகும்.

ராகு தசையில் அல்லது கேது தசையில் சிலருக்கு திருமண யோகத்தை கொண்டுவந்து தரும்.

ராகு இருக்கும் இடத்தை குழப்பி விடும்தான் விருச்சிகத்தில் ராகு உச்சம் அதனால் பாதிப்புக்கு பதில் நன்மைதான் நடக்கும். கன்னியில் ஆட்சி மாதிரி (சொந்தவீடு போல) அங்கு ராகு இருந்தாலும் நன்மையே செய்யும். சிம்ஹம், மகரம் கும்பத்தில் இருந்தால் பெரிய அளவில் கெடுதல் நன்மை எதுவும் செய்யாது

ராகு-கேதுவின் நக்ஷத்திர கால்களில் இருக்கும் கிரஹமும் ராகு/கேதுவை போல செயல்படும்

ராகு-கேதுவை கண்டு பயம் வேண்டாம். துர்க்கை, நாகநாதர் என்ற பெயரில் இருக்கும் சிவன் கோயில்கள், ந்ருஸிம்ஹர் இவர்களை வழிபட துன்பம் பறந்தோடும். கேதுவிற்கு பிள்ளையாரை அகவல் பாடி துதிக்க வேண்டும்.

தகவல்: ஜோதிடர் ரவி சாரங்கன்