சிரியா அகதிகள் முகாமை ஆய்வு செய்த்தார் நடிகை ஏஞ்சலினா ஜோலி

ஐநா சபையின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார். இங்கு 33 ஆயிரம் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். சிரியா உள்நாட்டு போரால் பெண்களும் குழந்தைகளும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியதாக அவர்கள் கூறியதை கவனமாக கேட்ட ஏஞ்சலினா ஜோலி, முகாமில் இருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் மற்றும் வர்த்தக வசதிகளை ஏற்படுத்த ஐநா சபையின் மனிதஉரிமை ஆணையம் நிதியுதவியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அகதிகள் முகாமை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏஞ்சலினா ஜோலி, முகாமில் உள்ளவர்களுக்கு முறையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முதலுதவிக்கு கூட மருந்துகள் இல்லை. ஐநாவின் உதவியுடன் இவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தான் இங்கு வந்துள்ளேன். இங்குள்ள மக்கள் உயிரை தவிர அனைத்தையும் இழந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.