இலங்கையின் மேற்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து இலங்கையில் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில், வட மேற்கு மாநிலங்களில் உள்ள குலியபிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா, டும்மாள்சூரியா ஆகிய மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் நடத்தி வந்த கடைகள் மற்றும் மசூதி மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதால் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து இந்த 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. பின்னர் நிலைமை சீரனாதை தொடர்ந்து விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி 11 மணி அளவில், ஹெட்டிபோலோ நகரில் மீண்டும் இரு சமூகதினரிடையே வன்முறை வெடித்தது. இதை தொடர்ந்து அங்கு இன்று காலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மோதலை தொடர்ந்து ஃபேஸ்புக், டுவிடர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது.