
வள்ளுவ வேதமாகிய குறளால் அடையாளம் பெற்ற திருவள்ளுவரின் அடையாளத்தை 1960களில் அழித்த திமுக.,வின் செயலுக்கு 2020ல், அதாவது 60 வருடங்கள் கழித்து எதிர்வினை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது, நாத்திக பிரசாரத்தின் ஓட்டைகள் புரிந்து விட்டிருக்கும் நிலையில், திருவள்ளுவரின் ஆத்திக அடையாளத்தை மீட்டெடுக்கும் போராகவே இன்றைய திமுக.,- பாஜக., என்ற கட்சிகளின் செயல்பாடுகளைக் காண முடிகிறது.
இந்நிலையில், பலரும் திருவள்ளுவரின் அடையாளம் குறித்து தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். வள்ளுவருக்கு காவியா? என்று மத ரீதியான விளக்கத்தை பலரும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான கஸ்தூரி, தனது கருத்தை டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார். அதில்…
திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல. இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா?
#போயி_புள்ளகுட்டிங்கள_படிக்க_வையுங்க என்ற ஹேஷ் டேக்குடன் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார் கஸ்தூரி.

மேலும், வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே…- திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு…. #tiruvalluvar – என்று இந்த விவகாரத்தை பெரிது படுத்தாதீர்கள் என்கிறார்.
ஆனால், நாத்திகப் படுகுழியில் அமிழ்த்தி வைக்கப் பட்ட திருவள்ளுவத்தையும் திருவள்ளுவருவரையும் மீட்டுக் கொண்டு வர வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கிறது என்பது, பொதுவான கருத்தாக இருக்கிறது!