29 C
Chennai
01/11/2020 12:13 AM

பஞ்சாங்கம் நவ.01- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: நவ.01ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...
More

  செங்கோட்டையில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை!

  ஐந்தருவி அன்னை சாரதாதேவி ஆசிரம நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா மாதாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு

  அக்.31: இன்று வால்மீகி ஜெயந்தி!

  குடும்ப விழுமியங்களில் இருந்து அரசாட்சி சூத்திரங்கள் வரை மனித தர்மங்கள் அனைத்தையும் ராமாயணத்தில் வால்மீகி அழகாக விவரித்துள்ளா

  தமிழகத்தில் இன்று… 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

  தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

  அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குச்சீட்டில் தமிழ் உள்பட 6 இந்திய மொழிகள்!

  இந்தத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்துக்கள் இந்த முறை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

  விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

  விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

  Source: Vellithirai News

  முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

  என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஊரக வளர்ச்சித் துறையில் வேலைநிறுத்தம் ஏன்?

  tamil nadu secretariat tamil nadu assembly

  உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக அரசு மறுப்பதால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போய் விட்டன. இது குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை ஏதுமில்லை. தமிழகத்தில் 140 ஆண்டுகள் காணாத வறட்சியை மக்கள் எதிர்கொண்டபோதும் தமிழக அரசு பெரிதாக கவலைப்படவில்லை. மத்திய அரசின் வாலாக மாநில அரசு இருந்தபோதும் வர்தா புயல் பாதிப்பு, வறட்சி நிவாரணம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, போன்றவை குறித்து அழுத்தம் ஏதும் தரவில்லை தமிழக அரசு.

  குடிநீருக்காகப் போராடிக் கொண்டிருந்த மக்களின் பிரச்சனை இயற்கையாக பொழிந்த மழையால் ஓரளவுக்கு மட்டுப்பட்டுள்ளது. உள் ளாட்சி நிர்வாகம் முடங்கியுள்ளதால் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, சுகாதார வசதி ஆகியவை சரிவர கிடைக்கப் பெறாமல் வழக்கம் போல் எளிய மக்களே வெகுவாக பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

  ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் அலுவலர்களையே தனி அலுவலர்களாக தமிழக அரசு நியமனம் செய்து பணி புரிந்து வருவதால் ஏற்கெனவே உள்ள பணிச்சுமையுடன் நிர்வாகப் பணிகள் கூடியுள்ளன. போதாக்குறைக்கு காலியாக இருக் கும் கீழ்நிலைப் பதவிகள் முதல் மேல் நிலைப் பதவிகள் வரை பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதால் விரக்தியில் பணி புரிந்து வருகின்றனர் அலுவலர்கள்.

  வழக்கமாக ஒதுக்கீடு செய்யப்படும் மாநில நிதிக்குழு ஒதுக்கீடு தொகையை ஒதுக்காமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தித் தாழ்த்தி வருகிறது அரசு. இதனால் கீழ்மட்ட ஊழியர்களின் ஊதியம் கேள்விக் குறியாகி ஊதியமின்றி பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படும் அவல நிலை. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் ஆழமாகப் பரிசீலித்துப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துறை செயலாளரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான ஹன்ஸ்ராஜ்வர்மா, துறை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் கூட்டுசேர்ந்துசெயல்படுகின்றனர்.

  மாநில அளவிலான எல்.இ.டி. பல்புகள், குடிநீரைச் சுத்தப்படுத்த குளோரின் மாத்திரைகள் திடக்கழிவு மேலாண்மை கொட்டகைகள் ஆகியவற்றைத் தரமின்றி ஒட்டுமொத்த கொள்முதல் செய்வதும் அப்பரிவர்த்தனையில் பெருந்தொகையைப் பங்கு போடுவதுமாக உள்ளனரே ஒழிய உள்ளாட்சி நிர்வாகத்தில் எவ்வித அக்கறையும் செலுத்தாமல் காலம் கழித்து வருகின்றனர்.

  இது இத்துறை ஊழியர்களை வெந்த புண்ணிலே வேலைப்பாய்ச்சியது போலானது. இதனால் அமைப்பு ரீதியாகப் போராடிய ஒவ்வொரு முறையும் வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வந்தனர் உயர் அலுவலர்களும் அமைச்சரும். ஊழியர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஊதிய உத்தரவாதமில்லை. சொந்தப் பணத்தைச் செலவழித்து ஊழியர்களும் அலுவலர்களும் டெங்கு உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணிகளையும் குடிநீர் வழங்கல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  எல்லை கடந்த நிலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களைச் சந்தித்து இத்தகைய அவலங்களுக்கான தீர்வு காண ஆவன புரியுமாறு கோரினர். அதனடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஊழல் புரிந்துவரும் ஊரகவளர்ச்சி இயக்குனர் பாஸ்கரன் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய நிதியை உடன் விடுவிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தினார்.

  இதே கோரிக்கைகளை தி.மு.க,காங்கிரஸ் கட்சிகளும் வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. எனினும் தமிழக அரசிடம் எந்த அசைவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறியென கொஞ்சம் நிதியை விடுவித்துவிட்டு வழக்கம் போல் உறங்கிக் கிடக்கிறது மாநில அரசு.ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால்தான் மத்திய அரசின் நிதி விடுவிக்கப்படவில்லை என்பதும் ஒருபுறம் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாக உள்ளது.

  ஆனால் தமிழக ஆட்சியாளர்களின் கவலையெல்லாம் ஆட்சியைத் தக்க வைப்பதும் ஆட்சியை முழுமையாக எஞ்சிய 3 ஆண்டுகளுக்கும் ஆள்வதோடு ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்குத் தேர் தலை நடத்தாமல் முடிந்தவரை சுருட்டிச் செல்வது எனும் முடிவிலும் உள்ளனர்.மூன்றடுக்கு ஊராட்சி நிர்வாகம் அனைத் தும் ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் நிலையிலுள்ள அலுவலர்களைத் தனி அலுவலர்களாகப் பொறுப் பாக்கி செயல்படுகிறது. அவர்கள் ஏற்கனவே அதிக பணிச்சுமையில் உள்ள நிலையில் இத்தகைய தனிஅலுவலர் பொறுப்பினை கூடுதலாக மேற்கொள்ள இயலாமல் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர்.

  பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத் திற்குரிய நிதி மத்திய அரசிடமிருந்து ஒழுங் காக வருவதில்லை. பசுமை வீடுகள் திட்டத்திற்குப் போதிய நிதியை மாநில அரசும் விடுவிப்பதில்லை. ஆனால் திட்ட இலக்குகளை சுவரின்றி சித்திரம் எழுதி முடிக்க நிர்ப்ந்திக் கப்படுகின்றனர். இந்நிலையில் பயனாளிகளுக்கும் ஊரகவளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் கசப்புணர்வே மேலோங்குகிறது.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சட்டப்படியாக தொடர்ந்து வழங்கவும் பேரூராட்சிகளுக்கு வழங்கவும் 100 நாட்கள் வேலையை 200 நாட்களுக்கு விரிவுபடுத்தவும் செங்கொடி விவசாயிகள் சங்கமும் விவசாய தொழிலாளர்கள் சங்கமும் போராடி வருகின்றன. ஆனால் இத்திட் டத்தை நிர்மூலமாக்கி வருகிறது மத்திய அரசு.

  கழிவறைகள் கட்டுதல், மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச வீடுகள், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு கட்டிட கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் சித்தாள் வேலை எனப்படும் மனிதநாட்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கழித்துக் கொள்ளப்படுகின்றன. இவை உண்மையில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்குப் போய்ச் சேருவதில்லை.

  எனவே ஏரி, குளம் கண்மாய், வரத்துக் கால்வாய், பாசனக்கால்வாய் தூர் வாருதல், இணைப்புச் சாலைகளுக்கான மண்வேலை என முன்பு வழங்கி வந்ததும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த சட்டப் பாதுகாப்பும் ஏட்டோடு போனது. தொடர்ந்து இத்திட்டத்தில் வேலை வழங்கப் படாததற்கு வேலையில்லா காலத்துக்கான நிவாரணம் நீர்மேல் எழுத்தானது. அரசின் மோசமான மக்கள் விரோத கொள்கையால் அலுவலர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தேவையற்ற மோதல் போக்கே உருவாகிறது.

  கட்டுமானப் பணிகளில் உள்ள மனித நாட்களின் இலக்கை முடிக்காததற்கு உயர் அலுவலர்கள் கீழ்நிலை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எல்லைமீறிய தொல்லை கொடுத்து வருகின்றனர். ஊரகவளர்ச்சித்துறையின் சிக்கல் மிகுந்த அனைத்து திட்டங்களும் நிதி விடுவிக்கப் படாத நிலையிலும் ஏன் முடிக்கவில்லை என உயர் அதிகாரிகள் கொடுத்துவரும் தொல்லைகளின் விளைவால் பல மாவட்டங் கள் பல நிலையிலான அலுவலர்கள் மன அழுத் தத்திற்குள்ளாகி இறந்துபோயுள்ளனர். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

  சிக்கல்கள் மிகுந்த ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை குக்கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது. ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் எனும் கோரிக்கையை முன்வைத்து 2017 மார்ச் மாதத்தில் 10 நாட் கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது தமிழக அரசு ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. தொடர்ந்து கொடுத்த அமைப்பின் அழுத்தத்தினால் பட்ஜெட் மானியக் கோரிக்கையில் அறிவிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஓராண்டு காலமாக வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது.

  சட்டமன்ற மானியக்கோரிக்கையின்போது அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜுன் 19 அன்று ஒட்டு மொத்த சிறுவிடுப்புப் போராட்டத்தை நடத்த முடிவெடுத்து அவ்வாறே வெற்றிகரமாக வரலாறு படைத்தது போராட்டம். எனினும் அரசு மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து தன் மெய்முகத்தை மீண்டும் காட்டியது.ஏற்கனவே ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை, பொறியியல் பிரிவில் சாலை ஆய்வாளர் முதல் பொறியாளர் வரை ஏராளமான கோரிக்கைகள் நிலுவையாக உள்ளன. முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கணினி உதவியாளர்கள் போன்ற தொகுப்பூதியம் மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்களின் உழைப்பு பல்லாண்டுகளாக ஒட்டச் சுரண்டப்பட்டு வருகிறது.

  முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கடந்த ஆட்சியின்போது பிரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களைப் பிரிக்க பல்லாண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தனது சுய லாபங்களுக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களை பலிகடாவாக்கி வஞ்சித்து வருகிறது தமிழக அரசு. போதிய கால அவகாசம் வழங்காமல் போதிய ஊழியர்கள் இன்றி திட்டங்களை முடிக்க அலுவலர்கள் நிர்ப் பந்திக்கப்பட்டு அதன்விளைவாக மன உளைச்சலில் செக்கிலிட்ட எள்ளாய் பிழியப்படுகின்றனர் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊழியர்கள்.

  இத்தகைய அசாதாரணமான அமைதியற்ற சூழலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை ஜுன் 22,23 தேதிகளில் கோவையில் கூடியது.அப்பேரவையில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள 26 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

  அதன்படி முதல் நாளிலேயே ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை பொறியியல் பிரிவில் சாலை ஆய்வாளர் முதல் பொறியாளர் வரை இருபதாயித்துக்கும் மேற்பட்ட ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். அதன் விளைவாக அன்றைய தினமே மாநில நிர்வாகிகள் அரசின் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

  இயக்குனர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் இரண்டு மணிநேரம் பேசியும் எந்த ஒரு கோரிக்கைக்கான அரசாணையோ அல்லது எழுத்துப் பூர்வமான உத்தரவாதக் கடிதத்தையோ அரசு வழங்கவில்லை. இந்நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தீவிரமாக நடத்த முடிவெடுத்து அவ்வாறே தமிழகம் முழுவதும் மூன்றடுக்கு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

  எனவே மேலும் கௌரவம் பார்க்காமலும் அரசின் வழக்கமான அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமலும் ஏற்கனவே அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்குரிய அரசாணைகளைப் பிறப்பித்தும் நிறைவேற்றத் தக்க கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதக் கடிதம் வழங்கியும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் அரசுக்கு நல்லது. பொதுமக்களுக்கும் நல்லது.

  • பெரணமல்லூர் சேகரன்

  (கட்டுரையாளர் – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் பொதுச் செயலாளர்)

  உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

  Latest Posts

  பஞ்சாங்கம் நவ.01- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம்: நவ.01ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...
  00:27:59

  செய்திகள்… சிந்தனைகள்… 31.10.2020

  பிரசாதத்தை தட்டிவிட்டு தேவர் திருமகனாரை அவமதித்தார் ஸ்டாலின்உத்திரகோச மங்கை மரகத நடராஜர் கோவிலில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு கிறிஸ்தவ கடவுளின் பெயரில் பத்திரிக்கை
  00:04:19

  பாரதியாரின் முழு நீள கவிதையை தமிழில் கூறி அசத்திய பிரதமர் மோடி!

  குஜராத் மாநிலத்தில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசியக் கவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசி அசத்தினார்.

  பாரதியாரின் முழு நீள கவிதையை தமிழில் கூறி அசத்திய பிரதமர் மோடி!

  பிரதமர் மோடி, தேசியக் கவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசி அசத்தினார்.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  72FollowersFollow
  958FollowersFollow
  17,300SubscribersSubscribe

  பாரதியாரின் முழு நீள கவிதையை தமிழில் கூறி அசத்திய பிரதமர் மோடி!

  பிரதமர் மோடி, தேசியக் கவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசி அசத்தினார்.

  அக்.31: இன்று வால்மீகி ஜெயந்தி!

  குடும்ப விழுமியங்களில் இருந்து அரசாட்சி சூத்திரங்கள் வரை மனித தர்மங்கள் அனைத்தையும் ராமாயணத்தில் வால்மீகி அழகாக விவரித்துள்ளா

  தமிழகத்தில் இன்று… 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

  தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

  செங்கோட்டையில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை!

  ஐந்தருவி அன்னை சாரதாதேவி ஆசிரம நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா மாதாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு

  அக்.31: இன்று வால்மீகி ஜெயந்தி!

  குடும்ப விழுமியங்களில் இருந்து அரசாட்சி சூத்திரங்கள் வரை மனித தர்மங்கள் அனைத்தையும் ராமாயணத்தில் வால்மீகி அழகாக விவரித்துள்ளா

  நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண உத்ஸவ பந்தக்கால் கொடியேற்றம்!

  திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலில் திருக்கல்யாணத் திருவிழாவுக்கான பந்தக்கால் கொடியேற்றம் நடைபெற்றது.

  மனு தர்மத்தை கொளுத்துவோம்! ஆனால்… இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு!

  தெருநாவளவன் மாதிரி மனுதர்மம் மனுதர்மம்னு கூவிட்டே இருப்பேன்னா கூவியே சாவு

  திருமாவைப் போல் விலை போகாமல்… இவர்கள் காத்திருக்கிறார்கள்!

  ஹரிஜனத் துறவியும் சிதம்பரம் தொகுதி முன்னாள் MLA-வுமான சுவாமி சகஜானந்தர் போன்ற உத்தமசீலர்கள்

  பெரியார் தேடிய முட்டாள்கள்: சோவின் தீர்க்க தரிசனம்!

  எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!
  Translate »