
கொள்ளு சுண்டல்
தேவையானவை:
கொள்ளு – ஒரு கப்,
காராமணி, பச்சைப் பயறு – தலா அரை கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – அரை டீஸ்பூன்,
ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பொடி
(டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கொள்ளு, காராமணி, பச்சைப் பயறு ஆகியவற்றை ஒன்றாக முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… வேக வைத்த கொள்ளு கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பொடியைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: பயறு வகைகள் வேக வைத்த நீரை, ரசம் செய்யும்போது சேர்க்கலாம்.