December 5, 2025, 5:48 PM
27.9 C
Chennai

Tag: சுண்டல்

நவராத்திரி ஸ்பெஷல்: இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல்!

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு பாகு வைக்கவும், பாகு நன்கு வந்த பின்பு வேகவைத்த கடலைப் பருப்பை போட்டு கிளறவும். கடுகு தாளித்து துருவிய தேங்காயைத்தூவி இறக்கினால் இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல் தயார்.

நவராத்திரி ஸ்பெஷல்: வெள்ளை கொண்டைகடலை சுண்டல்!

கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.

நவராத்திரி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு சுண்டல்!

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

நவராத்திரி ஸ்பெஷல்: காராமணி இனிப்பு சுண்டல்!

வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல் : கொள்ளு சுண்டல்

கொள்ளு, காராமணி, பச்சைப் பயறு ஆகியவற்றை ஒன்றாக முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… வேக வைத்த கொள்ளு கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பொடியைத் தூவி இறக்கவும்.