நவராத்திரி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு சுண்டல்!

Published:

paasiparuppu - 2026

பாசிப்பருப்பு சுண்டல்

தேவையானவை:


பாசிப்பருப்பு -ஒரு கிண்ணம்
பச்சை மிளகாய் -2
இஞ்சித் துருவல் -ஒரு சிறிய துண்டு
கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள் – தலா கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை -சிறிதளவு
தேங்காய்த் துருவல் -2 தேத்தகரண்டி
எண்ணெய், உப்பு -தேவையான அளவு.

pasi sundal - 2026

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

Related articles

Recent articles

spot_img