ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும்-ஜெயகுமார்

1823854 kv ramalingam - 2026

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா அண்மையில் மறைந்ததையடுத்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-இல் இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா, அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு நேற்று சந்தித்துப் பேசியது. வேட்பாளர் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று வாசன் தெரிவித்தார். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற காரணத்தால், தற்போதைய இடைத் தோ்தலிலும் அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா் யாா் என்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினார்.இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொண்டதாகவும் கூட்டணிக் கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் கே.வி. ராமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகளிடையே போட்டியில் நிலவுவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று ஜெயகுமார் கூறினார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories