December 5, 2025, 9:06 PM
26.6 C
Chennai

Tag: பாசிப்பருப்பு

நவராத்திரி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு சுண்டல்!

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

பொரிச்ச குழம்பு இப்படி செய்யுங்க !

குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.