
வெள்ளை பூசணி பொரியல்
தேவையானவை:
வெள்ளை பூசணி (நறுக்கியது) – ஒரு கப்,
வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூசணிக்காயை சேர்க்கவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும் (சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும்). காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை பிழிந்து போடவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
வெள்ளை பூசணி வாயுத்தொல்லையை தணிக்கும்.