சகோதரிகளை அரை நிர்வாணமாக்கி அடித்த கொடூரம்! தாயும் சகோதரர்களும் கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
madhyapradesh - 2026

ஆற்றில் குளிக்கப்போன பெண்களை அரை நிர்வாணத்துடன் அடித்து துவைத்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டம் பழங்குடியினர் கிராமத்தில்தான் இந்த காட்டு மிராண்டித் தனம் அரங்கேறியிருக்கிறது.

தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடி சமூகத்தினர் வசிக்கும் பிபால்வா கிராமத்தில் சகோரிகள் இருவரும் ஆற்றுக்கு குளிக்கச் சென்றிருக்கிறார்கள். குளிக்கச்சென்றபோது கரையில் அமர்ந்து தாய்மாமன்களுடன் செல்போனில் பேசியிருக்கிறார்கள்

இந்த தகவல் சகோதரிகளின் சகோதரர்களுக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் ஆற்றங்கரைக்கு ஓடி வந்துள்ளனர். உறவினர்களும் அவர்களுடன் ஓடி வந்துள்ளனர்.

மேலாடையை அவிழ்த்துவிட்டு குளிப்பதற்காக சகோதரிகள் ஆற்றுக்குள் இறங்கியபோது ஓடிவந்த சகோதரர்கள் அவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்துக்கொண்டு கரைக்கு வந்தனர்.

அங்கிருந்து மரக்கம்புகளை எடுத்து பலம் கொண்ட மட்டும் அந்த சகோதரிகளை அடித்து துவைத்தனர். அடி தாங்க முடியாமல் கதறியபோதும் ஆத்திரம் கண்ணை மறைத்ததால், தங்கள் கை வலியெடுக்கும் அளவுக்கு அடித்துவிட்டு, அப்புறமாக அந்த சகோதரிகளை அரை நிர்வாணத்துடனே அழைத்து செல்கின்றனர்.

கடந்த 25ம் தேதி நடந்த இந்த சம்பவ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற வைத்தது.

தண்டா போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இளம்பெண்களை அடித்த சம்பவத்தில் தாய் உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.