2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி நிறுவனம் தனது வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் வெளியீடு மார்ச் மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி எக்ஸ்பீரியா இயர் டுயோ என அழைக்கப்படும் புதிய ஹெட்போன்களில் நாய்ஸ்-கேன்சலிங், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி இன்டகிரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஹெட்போன்களில் வழங்கப்பட்டிருக்கும் டூயல் லிஸ்டிங் எக்ஸ்பீரியன்ஸ் எனும் அம்சம் வெளிப்புற சத்தத்தை குறைத்து முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது. எக்ஸ்பீரியா டுயோ வயர்லெஸ் ஹெட்போன்களை கொண்டு காலண்டர், செய்திகள் மற்றும் இதர தகவல்களை ஆடியோ நோட்டிபிகேஷன் வடிவில் அனுப்பும் வசதியை கொண்டுள்ளது.
இதன் அதிநவீன டெய்லி அசிஸ்ட் அம்சம் வாடிக்கையாளர் ஒரு நாள் முழுக்க செய்யும் பணிகள் சார்ந்த விவரங்களை சேகரித்து அதற்கேற்ற தகவல்களை பரிந்துரை செய்யும். வாடிக்கையாளர் பயன்படுத்தும் போது இனிமையான இசை அனுபவத்தை வழங்க சோனி தயாரித்த ஸ்பேடியல் அகௌஸ்டிக் கண்டக்டர் வழி செய்கிறது.
இத்துடன் சோனியின் க்ளியர் ஃபேஸ் ஆடியோ தொழில்நுட்பம் ஹெட்போன் பயன்படுத்தப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப ஹெட்போன் ஒலியை தானாக மாற்றிமைக்கும் வசதி கொண்டுள்ளது. இதனால் இசையை முழுமையாக அனுப்பவிக்க முடியும். இது சோனியின் CXD5602 சிப் மூலம் இயங்குகிறது. இந்த சிப்செட் மிக குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் பயணம் செய்யும் போது வரும் அழைப்புகளை ஸ்மார்ட்போனினை கையில் எடுக்காமல் தலையை மட்டும் அசைத்தே அழைப்பை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். அதிநவீன ஜெஸ்ட்யூர் அம்சம் இந்த வசதியை வழங்குகிறது. இத்துடன் ஹெட்போன்களை தழுவியே இசையை தேர்வு செய்வதும், ஒலியை மாற்றியமைக்கவும் முடியும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் வகையில் அசிஸ்டண்ட் மற்றும் சிரி இன்டகிரேஷன் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. சோனி எக்ஸ்பீரியா இயர் டுயோ கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் இதன் வெளியீடு மார்ச் மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.