ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், இன்று காலை நீதிமன்றத்தில் மதிமுக., பொதுச் செயலர் வைகோ ஆஜர் ஆனார். தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோபால் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. தம்மையும் எதிர்மனுதாரராக சேர்க்க கோரி வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்றது தேசிய பசுமை தீர்ப்பாயம். நிலத்தடி நீர், மாசுபாடு ஏற்படுத்தாத நிலையில் விதிகளை மீறவில்லை என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. நிலத்தடி மாசு என்று கூறி ஆலையை மூட ஆணையிட்டதை ஏற்க முடியாது என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது.
வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்தது.
மறà¯à®±à¯à®®à¯Šà®°à¯ போராடà¯à®Ÿà®¤à¯à®¤à¯à®•à¯à®•௠வழிகொடà¯à®¤à¯à®¤à®¤à®¾ தேசிய பசà¯à®®à¯ˆ தீரà¯à®ªà¯à®ªà®¾à®¯à®®à¯ ? அலà¯à®²à®¤à¯ இநà¯à®¤ உதà¯à®¤à®°à®µà¯ˆ மதிதà¯à®¤à¯ நடநà¯à®¤à¯à®•ொளà¯à®µà®¾à®°à¯à®•ளா அநà¯à®¤ ஊர௠பொதà¯à®®à®•à¯à®•ள௠?