paliyal - 2026

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல என்பதை நிருபிக்கும் விதமாக அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

பெங்களூரில் 2 பெண்களை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த கன்னட டிவி நடிகர் மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

கடந்த 12ம் தேதி இரவு அந்த பெண்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உணவுக்காக காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் யாரோ கதவை தட்ட உணவு தான் வந்துவிட்டது என்று நினைத்து கதவை திறந்துள்ளனா். ஆனால் முன்பின் தெரியாத யாரோ 3 ஆண்கள் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்த 3 பேரும் கத்தி காட்டி பயமுறித்தி அந்த இரண்டு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு .நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அந்த 3 பேரும் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியுள்ளனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இதனைதொடா்ந்து மிகவும் பயந்து போய் மிகுந்த மனஉளச்சலில் இருந்து வந்துள்ளனா். பின்னர் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து சக தோழிகளிடம் கூறி கதறி அழுதுள்ளனா். இதையடுத்து தோழிகள் மூலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனா்.

இதையடுத்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கன்னட டிவி நடிகர் ராகேஷ்(24), கேப் டிரைவர் மணிகண்டா(25), பானி பூரி விற்கும் சூர்யா(23) ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் கோரமங்களா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending