IMG 20171001 WA0016 - 2026

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார்குடி பெரியார் நகரை சேர்ந்தவர்
ஜெயராமன் மகன் குருமூர்த்தி (23).

இவர் கோவை தனியார் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக பயிற்சி
கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். நான்கு நாள் விடுமுறைக்கு
கல்லூரியிலிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டிலிருந்து குருமூர்த்தி காம்பவுண்ட் சுவரை
திடீரென தாண்டி குதித்து நிர்வாணமாக தெருவில் ஓடியுள்ளார்.

எதிரில் சென்றவர்களை தாக்கியும், கற்களை வீசி எறிந்தும் தகராறு செய்துள்ளார்.
பிடிக்க வந்தவர்களை கற்களைகொண்டு தாக்கியுள்ளார்.

இதனால் பொதுமக்கள் அலறி அடித்துகொண்டு ஒடினர். மேலும் திறந்திருந்த வீடுகளில்
உள்ளே புகுந்து பெண்களை தாக்கியுள்ளார். இவரின் அட்டகாசம் தாங்கமுடியாமல்
பொதுமக்கள் 25 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து வரை பிடித்து கட்டிவைத்துவிட்டு
காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் குருமூர்த்தியை பிடித்து அவரது வீட்டிற்கு
அழைத்து சென்றனர். அவரது தாயிடம் அவரைப்பற்றி போலீஸார் கேட்டுள்ளனர்.

ALSO READ:  திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

அதற்கு அவரது தாயார் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வரும்போது திருச்சி
பேருந்து நிலையத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு நின்றுகொண்டு சாலையில்
சென்றவர்களிடம் தகராறு செய்துள்ளான், அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து
வைத்துக்கொண்டு விசாரித்த போது எங்களுடைய செல்போன் நம்பரை கூறியுள்ளான்.

அங்கிருந்த எங்களுக்கு போன் வந்ததும். நாங்கள் திருச்சி சென்று
அழைத்துவரும்போது நான் சாகப் போகிறேன் என்று கூறினான்.
தூக்க மாத்திரை போட்டு தூங்கவைத்தோம். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில்
வளர்க்கும் நாயை கடித்து உள்ளான்.

அதன்பிறகு வெளியேறி சென்றான். மேலும் அவன் இரண்டு கைகளையும் செல்போன் மீது
வைத்துக்கொண்டு கேம் விளையாடுவதுபோல் வைத்துக்கொண்டு அதே சிந்தனையாக உள்ளான்
என்று கூறியுள்ளார்.

குருமூர்த்தியை பொதுமக்கள் பிடித்த போது நான் சாக வேண்டும் என்று தொடர்ந்து
கூறியுள்ளனர்.
குருமூர்த்தி தடை செய்யப்பட்ட ப்ளுவேல் கேம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கலாம்
என்று கருதிய போலீஸார் அவரை கவுன்சிலிங் செய்ய மருத்துவரிடம் அழைத்து
செல்லுமாறு கூறி அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இது அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending