ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் வலுவடைந்துள்ளது. தூத்துகுடி எந்த பக்கம் உள்ளது என்று தெரியாத நெட்டிசன்கள் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு என சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போடுகின்றனர். இந்த ஒரே ஒரு ஆலையினால் ஒரு ஊரே மாசு அடைகிறதா? உண்மையில் என்ன நடக்கின்றது? இதுகுறித்து ஃபேஸ்புக் பயனாளியின் ஒரு பதிவை தற்போது பார்ப்போம்
சிங்கப்பெருமாள் கோவிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் 42 கிலோமீட்டர்கள் இரண்டு பக்கமும் இடைவெளி இல்லாமல் தொழிற்ச்சாலைகள். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் தொழிற்ச்சாலைகள் நிறைந்துள்ளன. இங்கெல்லாம் பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள். இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள் கூட பெரும்பாலும் தூத்துக்குடித் துறைமுகம் வந்துதான் பிற பகுதிகளுக்கு செல்கின்றன. மின்சாரம் கூட பெருமளவிற்கு திருநெல்வேலி, கண்னியாகுமரி மாவட்ட காற்றாலைகள், Solar மின் உற்பத்தி மேலும் கூடங்குளத்தின் அணு மின்நிலையம் மூலம் செல்கிறது.
ஆனால், தென்மாவட்டங்களில் உறுப்படியான தொழிற்ச்சாலைகள் எதுவும் கிடையாது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருபுறமும் விவசாயமும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை தொழிற்ச்சாலைகளும் அவ்வளவாகக் கிடையாது. தென்மாவட்டங்களிலிருந்து மனிதவளம் முதற்கொண்டு அனைத்தையும் பெற்றுக்கொண்டு சென்னை பொருளாதாரத்தை வளர்க்கிறது. தென் மாவட்ட மக்கள் வேலை வாய்புகளுக்காக பல நூறு கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து வாழ வேண்டியுள்ளது. விடுமுறை நாட்கள் வந்து விட்டால் கோயம்பேட்டிலும், எக்மோரிலும் அலைபாயும் மக்கள்
இந்த நிலையில் ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளையும் பொய்யான சில காரணங்களைக் கூறி மூடிவிடத் துடிக்கும் பிரிவினைவாதிகள். உண்மையில் தொழிற்ச்சாலை இவர்களுக்கு பிரச்சினை இல்லை. இதைச் சாக்காக வைத்து மத்திய அரசை எதிர்க்க வேண்டும், கெட்ட பெயரை உருவாக்க வேண்டும். இதே போன்றுதான் கூடன்குளம், டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம், தேனி நியூட்ரினோதிட்ட எதிர்ப்புகள் எல்லாமே. இத்தனைக்கும் இவற்றில் எதுவுமே மோடி கொண்டுவந்த திட்டங்கள் அல்ல. அவ்வளவு ஏன்? இப்பொழுது மோடி அரசு 10,000 கோடிகளில் அறிவித்துள்ள சேலம், சென்னை எட்டு வழி விரைவுச் சாலைச் திட்டத்தைக் கூட தொழிலதிபர் ஜின்டால் அவர்களது கம்பெனியின் வளர்ச்சிக்காக என்று கிளப்பிவிட்டு மக்களை குழப்பி வருகிறது ஒரு கூட்டம். நிச்சயமாக இவர்கள் நிலம் கையகப்படுத்த விடமாட்டார்கள். ஊடகங்களும் ஊதிப் பெரிதாக்கி மோடியை வில்லனாக சித்தரிக்கும். இது மட்டுமல்ல நாளை நதிநீர் இணைப்புத் திட்டம் வந்தாலும் இதேதான் நடக்கும்.
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி நகரில் காற்று மாசடைந்து விட்டதாக எந்த ஆய்வறிக்கையும் இல்லை. சொல்லப்போனால் காற்று மாசில் முதல் 500 நகரங்கள் பட்டியலில் கூட தூத்துக்குடி வரவில்லை. இந்த வீணாய்ப்போன அரசியல்வாதிகளை நம்பி நாட்டின் காப்பர் தேவையில் 36%த்தை தயாரித்துக் கொடுக்கும் தொழிற்ச்சாலையை மூட வைத்து விடாதீர்கள். கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களால் நிரந்தரமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் அதிகம். வேலையிழந்த அப்பாவிகளும் மிக, மிக அதிகம். எனவே, ஏமாந்து விடாதீர்கள். மாறாக, தென்மாவட்டங்களுக்கு அதிகமாக தொழிற்ச்சாலைகளை ஒதுக்க வேண்டும் என்று போராடுங்கள்.