மதுரை: நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் – சிபிஎஸ்இ.க்கு நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது.
நீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படும் போது பின்பற்றப்படும் விதிகள் என்ன?
நீட் தேர்வு தொடர்பான வினாக்களுக்கான வார்த்தைகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது?
தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தப் பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று தெளிவு படுத்தப் பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளது.