குடிகார கணவனை கொலை..செய்த மனைவி..!

criam koli - 2026
குடித்துவிட்டு அடித்த கணவனை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு சடலத்தை வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்த மனைவியை  போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் பாண்டிஸ்வரி தம்பதியினா். இவா்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இதில் கணவா் ஆறுமுகத்திற்கு சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளது. அதில் ஒரு வீட்டில் அவா் இருந்து கொண்டு மற்ற இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் வருமானத்தில் வேலை எதும் செய்யாமல் வீணாக ஊா் சுற்றவது குடிப்பது என ஜாலியாக இருந்த வந்துள்ளார். இந்நிலையில் பாண்டிஸ்வரியை திருமணம் செய்த நாள் முதலாக ஆறுமுகம் தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதும் சண்டையிடுவதும், அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆறுமுகத்தின் செயல்பாடுகளால் வெறுப்படைந்த மனைவி பாண்டிஸ்வரி கணவரை கொலை செய்து விடுவது என முடிவெடுத்த நிலையில்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே கணவன் மனைவி இடையே வழக்கம் போல சண்டை நடக்கவே, அக்கம் பக்கத்தினருக்கும் அந்த சண்டை கேட்டுள்ளது. அதன்பின்னர் சில நாட்களாக ஆறுமுகத்தின் சத்தத்தையே காணவில்லை. வீட்டில் வந்த துர்நாற்றம் பாண்டீஸ்வரி மட்டும் வீட்டிற்குள் சென்று வந்திருக்கிறார். ஆறுமுகத்தின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பாண்டீஸ்வரி வெளியே போன நேரத்தில் அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது அழுகிய நிலையில் ஆறுமுகத்தின் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள் காவல்நிலையத்தில் தகவல் கொடுக்கவே, போலீசார் பாண்டீஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். பாண்டீஸ்வரி கூறிய பதில்களே அவர்தான் கொலை செய்திருப்பார் என்று காட்டிக்கொடுத்தது.
இனியும் மறைக்க முடியாது என்று நினைத்த பாண்டீஸ்வரியே தனது கணவரை கொன்றதை ஒத்துக்கொண்டார். தினசரியும் குடித்து விட்டு வந்து அடித்து தொந்தரவு செய்தார் என்றும் போதையில் மயங்கிய நிலையில் இருந்த போது கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டதாகவும் பின்னர் அழுததாகவும் கூறினார். கொலை செய்து விட்டாலும் பாசத்தில் தினசரியும் அழுதுள்ளார். அழுகிய பிணம்.. ஓயாத அழுகை சடலத்தை மறைத்து வைத்திருந்தாலும் துர்நாற்றம் காட்டிக்கொடுத்துவிட்டது. பாண்டீஸ்வரியின் வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத்தகராறு கொலையில் முடிந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending