கிருஷ்ணகிரி அருகே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்; மருமகள் விஷம் குடித்து தற்கொலை…!

கிருஷ்ணகிரி அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சந்தியா–கண்ணன் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கண்ணனின் மனைவி சந்தியாவிடம் அவரது மாமனார் முருகன் அவ்வப்போது தவறாக நடக்க முயல்வதும் அதை சந்தியா தடுப்பதுமாக இருந்து வந்துள்ளது.

இந்த கொடுமைகளை தனது கணவர் கண்ணன் மற்றும் தனது மாமியாரிடமும் தெரிவித்துள்ளார்.

அப்போது இது எல்லாம் சகஜம்தான் அனுசரித்துக்கொள் என்று சொல்லியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்தியா கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் நாகரசம்பட்டி காவல் நிலையத்திலும் மாமனாரின் பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகார்கள் மீத காவல் துறையினா் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த சந்தியாவை மாமனார் முருகன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் சந்தியா புகார் செய்துள்ளார்.

அதற்கு ஊர் நிர்வாகிகள் அலட்சியமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சந்தியா தனது தந்தை வீட்டுக்கு வந்து மாமனார் முருகன் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து கூறியுள்ளார்.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத போது சானிபவுடர் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
.
இதனையடுத்து விஷம் குடித்த சந்தியாவை அவளது பெற்றோர் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றனா். அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

இதனைதொடர்ந்து சந்தியாவின் பெற்றோர் நடந்த சம்பவத்தை கொண்டு சந்தியாவின் கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனா்.

இதனடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...