பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் இதுகுறித்து குறிப்பிட்டபோது…
பழனி புனிதமான சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும்.
*சண்முக நதியில் மாசுபடுத்தும் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
*சண்முக நதியில் வளர்ந்து இருக்கக் கூடிய ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி கொடிகளை
அகற்றி நதியை தூய்மைப்படுத்த வேண்டும்.
*பக்தர்கள் புனித நீராடுவதற்கும் வழிபாடு செய்வதற்கும் படித்துறைகள் அமைக்கப்பட வேண்டும்.
*பங்குனி உத்திரம் தைப்பூசம் போன்ற திருவிழாக்
காலங்களில்
சுவாமி தீர்த்தவாரி செய்வதற்கு உரிய நடவடிக்கையை வசதிகளை சண்முகநதியில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
பக்தர்கள் நீராடுவதற்கும் தீர்த்தங்கள் எடுத்துச் செல்வதற்கு வசதியாக இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
இந்து தமிழர் கட்சியின் சார்பில் இன்று17.06.2019 திங்கள்கிழமை உயர்திரு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு அளிப்பு நிகழ்ச்சிக்காக
இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் இராம.இரவிக்குமார் வந்திருந்தார்.
இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர்பழனி மனோஜ் குமார் தலைமையில் இந்து தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மருதுபாண்டி ஹரி பாலன் மோகன் மதன் சக்திவேல் ஜீவா காளி வனராஜ் உள்ளிட்டபல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் .
உரிய நடவடிக்கை எடுப்பதாக
மாவட்ட ஆட்சியர் தசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார் ;
உத்தரவு பிறப்பித்தார்..