23 June18 Train - 2026

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் தொடர் கொள்ளை யில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரயில் பயணிகளிடம் சுமார் 41 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.

.இது குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த கமல் தாஸ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் ரயில் கொள்ளை யில் தொடர்புடையது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்த சுமார் 32 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கமல்தாஸை, நெல்லை மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending