ஜெயலலிதா ஆட்சியில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்தார்கள்; அதை இந்த ஆட்சியில் கட்டச் சொல்கிறார்கள்?!

madurai central cooperative bank - 2026

சோழவந்தான் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் செலுத்தியவருக்கு மீண்டும் பணம் கட்டச் சொல்லி குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். ஜெயலலிதா ஆட்சியில் கடன் பெற்று அதற்காக வட்டிக் கடன் தள்ளுபடி செய்ததை தற்போதுள்ள அரசாங்கம் அந்த தள்ளுபடியை நீக்கி கடன் பெற்றவர்கள் மீது திணிக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது என்று கூறுகிறார் அவர்.

சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறு குறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சிறு தொழிலுக்காக கடன் வாங்கி திருப்பிசெலுத்தி வருகின்றனர்

கடந்த மார்ச் 30ம் தேதி இந்த வங்கியில் 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கியதில் கடன் பாக்கி உள்ளதாகவும், இதை மார்ச் 31ந்தேதி கடன் முழுவதும் பாக்கி இல்லாமல் செலுத்தி நேர் செய்யவும் என்று அவரவர் செல்போனுக்கு தகவல் வந்துள்ளது.

இதனால், வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வங்கியில் 2016 ஆம் ஆண்டு கடன் பெற்று கடனை முழுவதும் திருப்பி செலுத்திய சீனிவாசன் என்பவர் கடந்த 30 ஆம் தேதி சோழவந்தானில், உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் பார்த்தசாரதியைசந்தித்து இதுபோல் தகவல் வந்திருக்கிறது. நாங்கள் 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கி முழுவதும் செலுத்தி விட்டு அதிலிருந்து மூன்று முறை கடன் வாங்கி முழுமையாக செலுத்தி உள்ளோம். கடைசியாக செலுத்திய கடன் தொகை கடன் இல்லை என்று பாஸ்புக்கில் எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால், எங்களுக்கு 2016 ஆம் ஆண்டு கடன் பாக்கி உள்ளதாகவும், கடனை செலுத்த வேண்டும் என்று குறுந்தகவல் வந்திருக்கிறது. இது எங்களுக்கு மனவேதனை தருகிறது என்று கூறியுள்ளார். இதற்கு கிளை மேலாளர் இது எங்களுக்கு சம்பந்தமில்லை மாவட்ட அதிகாரிகள் அனுப்பிய குறுந்தகவல் இருந்தாலும் உங்களுடைய பெயரில் உங்களது கணக்கில் 2016 ஆம் ஆண்டு கடன் பாக்கி உள்ளதாக காட்டுகிறது. ஆகையால், நீங்கள் கடனை செலுத்த வேண்டும் என்று கூறி மேலும், வாடிக்கையாளர் மனதை புண்படச் செய்து உள்ளார்.

சம்பந்தப்பட்ட வங்கியில் சிறு தொழில் செய்ய கடன் வாங்கி மாதந்தோறும் தங்களது தவணையை செலுத்தி மீண்டும் மறுபடியும் கடன் பெற்று தொழிலில் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, ஆன்லைன் மூலமாக வியாபாரம் செய்யக்
கூடிய நிலை உள்ளதால் சிறு தொழில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்களின் வியாபாரம் தற்போது மிகவும் குறைந்து வரும் நிலையில்தற்போது வாங்கிய கடனை கட்டுவதே சிரமப்பட்டு கட்டக்கூடிய நிலை உள்ளதாகவும், முறையாக கடனை அடைத்து திரும்ப கடன் பெற்றுள்ள நிலையில் பழைய கடனுக்கு பாக்கி உள்ளதாக கூறுவது சந்தேகமாக உள்ளது என்றும், 2016 ஆம் ஆண்டு கடன் பெற்ற சிறு வியாபாரிகள் குமுறுகின்றனர்.

ஆகையால், மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலட்சியத்தால் கடன் பாக்கி உள்ளதா, இல்லை அங்கு உள்ள பணியாளர் கூறுவது போல் அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் கடன் பெற்று அதற்காக வட்டிக் கடன் தள்ளுபடி செய்ததை தற்போதுள்ள அரசாங்கம் அந்த தள்ளுபடியை நீக்கி கடன் பெற்றவர்கள் மீது திணிக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

எது உண்மையோ தேசிய வங்கிகள் எத்தனையோ இருந்தும் கூட்டுறவு வங்கி மேம்படுத்த வேண்டும் என்று சாதாரண சிறு குறு விவசாயிகள் சிறு தொழில் நடத்தக்கூடிய சிறு பெட்டிக்கடை வியாபாரிகள் கணக்கு வைத்து சேமிப்பு மற்றும் நகை கடன், வியாபார கடன் விவசாய கடன் பெற்று வருகின்றனர்.

தற்போது, இவர்களுக்கு வந்திருக்கும் குரு செய்தி மூலம் இவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளதாக கூறுகின்றனர். வியாபாரிகள் ஆகையால், அரசும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் உயர் அதிகாரிகளும் இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories