பாடகி சித்ராவின் மகள் இறப்பில் விலகாத மர்மங்கள்; மனம் திறந்த சித்ரா..!

Published:

Chithra 1 - 2026

தனது மகளின் மர்மமான மரணம் குறித்து பல விஷயங்களை போட்டுடைத்த பிரபல பாடகி சித்ரா

தமிழகம் மற்றும் கேரளா மற்றும் தென் இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக புகழ் பெற்ற பாடகியாக இருந்து வருபவர் சித்ரா,

இவருக்கு பல ஆண்டுகள் காத்திருந்து பெற்றெடுத்த தமது மகளின் மர்ம மரணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார் .

Chithra 3 - 2026

புட்டர்பர்த்தியில் உள்ள சத்தியசாயிபாபாவிடம் தமது பிள்ளையில்லாத வாழ்க்கை தொடர்பாக ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டபோது, அடுத்தமுறை இங்கு வரும்போது குழந்தையுடன் வருவாய் என்ற ஆசியை அவர் வழங்கியுள்ளார்.

பின்னர் அது நிகழ்ந்தது எனவும் சித்ரா கூறியுள்ளார் .

தான் பாடிய பாடல்களில் மஞ்சாடி என்ற தனியார் பாடல் தொகுப்பு தமது மகளுக்கு கொள்ளை பிரியம் என சொல்லும் சித்ரா, அந்த பாடல்களை அவர் வீடியோவாக பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்

Chithra 2 - 2026

. சம்பவத்தன்று துபாயில் உள்ள ஓட்டலில், தமது மகள் மஞ்சாடி பாடல்களின் காணொளி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுகொண்டே தாம் குளிக்க சென்றதாக சொல்லும் சித்ரா அந்த சமயத்தில் சிறுமி நந்தனா ஏன் நீச்சல் குளம் குறித்து சிந்திக்க வேண்டும் என கேள்வி எழுப்பும் பாடகி சித்ரா, தமது மகள் தம்முடன் எப்போதும் ஒரு பொம்மை வைத்திருப்பதாகவும், அன்று அந்த பொம்மை அவரிடம் இல்லை எனவும்,எப்போதும் காலணியுடன் இருக்கும் தனது மகள் ஏன் அன்று அதை மறுத்தார் என்பதும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது என்றார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அது மட்டுமின்றி அந்த குடியிருப்பின் கதவுகளை திறந்து சிறுமி நந்தனாவால் எப்படி வெளியேற முடிந்தது? அந்த நீச்சல் குளத்தின் இரும்பு கதவை சிறுமியால் எப்படி திறக்க முடிந்தது உள்ளிட்ட பல கேட்விகளுக்கு இன்னமும் தமக்கு விடை கிடைக்கவில்லை என்று கூறுகிறார்

Chithra 4 - 2026

அவர். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்திய போது, நீச்சல் குளத்தின் அருகில் வரை, தனது மகளின் காலடிப் பதிவுகள் இருந்ததாகவும், போலீசார் வந்து அதை பதிவு செய்ததாகவும், இல்லையென்றால் துபாய் சட்டப்படி பெற்றோரான தாங்கள் சிறைக்கு செல்ல வேண்டி வந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்

அப்போது போலீசாரும் சிறப்பு அதிகாரிகளும் அந்த கால் அடையாளங்களை காணொளியாக பதிவு செய்த பின்னர் அந்த அடையாளங்கள் மாயமானதாகவும் சித்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img