
புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தலின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார். ஆனால், ஆளுநர் முதல்வர் சண்டையில் இப்போது போலீஸார் மண்டை காய்ந்து போய்க் கிடக்கிறார்கள்!
தேர்தல் பிரசாரத்தின் போது, இறுதி நாளில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், எதிர்க் கட்சியான என். ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் தனித்தனியாக இருசக்கர வாகனப் பேரணி நடத்தப் பட்டது. அப்போது அதில் வந்த எவருமே ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.
இதை அடுத்து இந்த விவகாரத்தில் புதுச்சேரி டிஜிபி உத்தரவின் பேரில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பான நோட்டீஸை கோரிமேடு காவல் நிலைய போலீஸார் தயாரித்துள்ளனர். அதற்காக, ரூ. 100 அபராதம் விதிக்கும் வகையிலான நோட்டீஸை அந்தந்த கட்சி பிரமுகர்களிடம் போலீஸார் அளித்துள்ளனர். ஆனால், அவர்களோ அதனை வாங்க மறுத்துள்ளனர்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘ரோந்து செல்வதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் முன்பொரு முறை சாலையில் சென்ற ஆளுநர் கிரண்பேடி மீது முதலில் நடவடிக்கை எடுங்கள்’ என்றதுதான்!
இவர்கள் மட்டுமல்ல, முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மீதும் நோட்டீஸ் தயாராகி உள்ளது. ஆனால் இதை முதல்வர் மற்றும் அமைச்சரிடம் எப்படி தருவது என்று குழப்பத்தில் இருக்கின்றனர் போலீஸார்.
ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில், ஆளுநர் கிரன்பேடியும், முதல்வர் நாராயண சாமியும் டிவிட்டர் பதிவுகளில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர்.
அதே நேரம், புதுச்சேரி டிஜிபி.,யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அதன் நிர்வாக குழு உறுப்பினர் முருகன் ஒரு மனுவை அளித்தார். அதில், ‘தேர்தல் பிரசாரத்தில் ஹெல்மெட் அணிவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது. அரசு ஊழியர் களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் பிரசாரத்தில் செல்பவர்கள் யார் என்று தெரியும் வகையில் ஹெல்மெட் அணியக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது! ஆனால், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஆளுநர் கிரண்பேடி, காரில் சீட் பெல்ட் போடாமல் சென்ற புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
This time Mr CM you and your accomplices shall pay the penalty for making a mockery of the law. And Directions of the Honbl Supreme Court and the Madras High Court. Enough is enough. You have been obstructing them from carrying out their duties. No More..@PMOIndia @AmitShah @ANI pic.twitter.com/a4hkbH0Nvv
— Kiran Bedi (@thekiranbedi) October 20, 2019
It’s Sunny and Rainy day ! Mass Bike rally Campaign for our #Congress candidate Shri John Kumar who is contesting in Kamarajar Nagar Assembly Constituency by-election #Puducherry . @INCIndia pic.twitter.com/k8PyNoCSE7
— V.Narayanasamy (@VNarayanasami) October 19, 2019
It’s Sunny and Rainy day ! Mass Bike rally Campaign for our #Congress candidate Shri John Kumar who is contesting in Kamarajar Nagar Assembly Constituency by-election #Puducherry . @INCIndia pic.twitter.com/LyoiSCC0AL
— V.Narayanasamy (@VNarayanasami) October 19, 2019
It’s Sunny and Rainy day ! Bike rally Campaign for our #Congress candidate Shri John Kumar who is contesting in Kamarajar Nagar Assembly Constituency by-election #Puducherry . @INCIndia pic.twitter.com/8SbYuwt4Ha
— V.Narayanasamy (@VNarayanasami) October 19, 2019
Practice before you preach… https://t.co/2Lz0Yrk4Zt pic.twitter.com/G6dhk08y0j
— V.Narayanasamy (@VNarayanasami) October 20, 2019
The CM of Puducherry has been obstructing the law and also violating the law. Its caused several fatal and injury accidents because of this. It’s time the judiciary holds such obstructionists to account. pic.twitter.com/ylCBPyt45t
— Kiran Bedi (@thekiranbedi) October 20, 2019