
மூளையைக் குழப்பும் பேச்சாலேயே இளைஞர்கள் பலரை மூளைச் சலவை செய்து, தன் கட்சிக்கும் தன் குடும்பத்துக்கும் அடிமையாக்கியவர் முன்னாள் திமுக., தலைவர் கருணாநிதி. அதே பேச்சு சாதுரியத்தால் இப்போது அடிக்கடி செய்திகளில் வலம் வந்து, புகழ்பெற்று வருகிறார் அவரது மகனும் தற்போதைய திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவில், மணமகளின் கணவராக வருபவருக்கு பதில் அவரது அப்பா, அதாவது மணமகளின் மாமனார் பெயரை மாற்றிக் கூறி மு.க.ஸ்டாலின் வழக்கம்போல் பேச்சு சாமர்த்தியத்தைக் காட்டியதால், பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் மு.க.ஸ்டாலினின் முகத்தை நோக்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை என்ற கிராமத்தில் திமுக பிரமுகர் திருமண இல்ல விழா நடைபெற்றது.
காசி விஸ்வநாதன் – பொற்கொடி தம்பதியரின் மகன் சுப்பிரமணியனுக்கும், அடைக்கலம் காத்தான் – பூபதி ஆகியோரின் மகள் பிரதீபாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். விழா மேடையில் வழக்கம் போல் திருமணப் பத்திரிகை எனும் துண்டுச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவர் பேசிய போது….
பெண்ணின் மாமனாரை (காசி விஸ்வநாதன்) மணமகன் என பெயர் சொல்லிக் குறிப்பிட்டார். இது, அவர் அருகே நின்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பலரது முகத்திலும் ஆச்சரியப் படும் விதத்தில் எதிரொலித்தது.
திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவரும் திடுக்கிட்டுத்தான் போனார்கள். ஆனால் உடனே தனது உளறலை உணர்ந்த அவர், பின்னர் திருத்திக் கொண்டு, மணமகன் பெயரை சரியாகச் சொல்லி சமாளித்தார்.
இது இப்போது டிவிட்டர் பதிவுகளில் வைரலாகி, ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.