
கேரள மாநிலத்தை சேர்ந்த ரிஜோஷ் என்பவருக்கு லிஜி என்ற மனைவியும் குழந்தையும் இருக்கின்றனர்.
அவர்கள் ரிசார்ட் ஒன்றில் வேலை பார்த்து வருவதால் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ரிஜோசை காணவில்லை என்று கூறி அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், அவருடைய மனைவி யாரும் பயப்பட வேண்டாம். அவர் என்னுடன் செல்போனில் பேசினார் என்று கூறி தன் கால் லாகை காண்பித்துள்ளார்.

இருப்பினும் அவருடைய மனைவி மீது சந்தேகம் ரிஜோவின் உறவினருக்கும், போலீசுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக லிஜி, தன்னுடைய குழந்தையுடன் காணாமல் போயிருக்கிறார்.
அத்தோடு ரிசார்ட்டின் உரிமையாளரும் தலைமறைவாகி இருக்கின்றார்.

இந்நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
வீட்டின் பின்புறம் மணல் குவியல் இருந்துள்ளது. அதை தோண்டி பார்த்த பொழுது ரிஜோஷ் சடலமாக கிடந்துள்ளார்.
அதன் பின்னர் விசாரணையில் லிஜிகும் ரிசார்ட் ஓனருக்கும் கள்ளகாதல் இருந்தது தெரியவந்துள்ளது.
எனவே, என ரிஜோசை மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரும் தீர்த்துக்கட்டிய கதை அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.