karur-transport-minister-vijayabhaskar
karur-transport-minister-vijayabhaskar

கரூர் அருகே நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கலந்து கொண்டு வரும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை கடம்பன்குறிச்சி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கடம்பங்குறிச்சி, பால்வார்பட்டி, வாங்கல், கருப்பம்பாளையம் உள்ளிட்ட 18 இடங்களில் சுமார் 4 கோடியே 90 லட்சம் மதிப்பில் தானிய கிடங்கு அமைத்தல், விவசாய சேமிப்பு கிடங்கு கட்டுதல், சிறு பாலம் கட்டுதல், வடிகால் வசதி, பேவர் பிளாக் சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கான பூமி பூஜைகள் நடைபெற்றன.

மாவட்ட திட்ட இயக்குநர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

karur-transport-minister-vijayabhaskar1
karur-transport-minister-vijayabhaskar1

வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அருகருகே நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் இருப்பதாலும், கார் செல்ல முடியாத வீடுகள் நெருக்கமான பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளூர் நிர்வாகி ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கலந்து கொண்டார்.

அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், அவர்கள் கொடுக்கு மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து இரு சக்கர வாகனங்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். அவருடன் சென்ற அதிகாரிகள் அவரை 4 சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending