telangana cm krc - 2026

தெலுங்காணா முதல்வர் கேசிஆர் பேரன் ஹிமான்ஷுவுக்கு பெருமைமிகு டயானா விருது… இதுகுறித்து ஹிமான்ஷு டுவிட்டர் மூலம் அனைவருக்கும் தெரிவித்தார். இந்த அவார்டு கிடைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மகனுக்கு விருது கிடைத்தது பற்றி முதல் அமைச்சரின் மகன் கேடிஆர் கூட ட்விட்டரில் ஹிமான்ஷுவை பாராட்டியுள்ளார். ஹிமாஷுவுக்கு பிரிட்டிஷ் இளவரசி டயானா பெயரில் இந்த விருது அளிக்கப்படுகிறது. சிறப்பாக சமுதாய சேவை செய்ததற்காக இளைஞர்களுக்கு அளிக்கப்படும் விருது இது.

தெலங்காணா முதலமைச்சரின் பேரன், அமைச்சர் கேடிஆரின் மகன் ஹிமான்ஷு ராவுக்கு மதிப்பு மிகுந்த விருது வந்தடைந் துள்ளது. பிரிட்டிஷ் இளவரசி டயானா பெயரில் இந்த அவார்ட் கிடைத்துள்ளது.

ktr tweet - 2026

இந்த விருதுக்காக உலகெங்கிலுமுள்ள 9 லிருந்து 25 வயது உள்ள இளைஞர்களை என்னென்ன சமுதாய சேவை செய்தார்கள் என்பதை கணக்கிட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்.

கஜ்வேல் தொகுதியில் உள்ள கங்காபூர், யூசுப்கான்பல்லி என்ற கிராமங்களை சுய முன்னேற்றத்தின் வழி எடுத்துச்செல்லும் அம்சங்களின் மீது ‘சோமா’ என்ற பெயரோடு ஹிமான்சு ஒரு ப்ராஜக்டை தொடங்கினார்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

அவர் மேற்கொண்ட பல்வேறு நலப் பணிகளுக்காக அவரை இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இது தொடர்பாக தன் ப்ராஜெக்ட்டுக்கு வழிகாட்டிய தன் தாத்தா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஹிமான்ஷு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு உதவிய இரு கிராம மக்களுக்கும் தன் மென்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஹிமான்ஷு கிராமங்களில் மேற்கொண்ட முயற்சியை பாராட்டி டயானா அவார்டு ஆர்கனைசேஷன் அவருக்கு விருது அறிவித்துள்ளது. இந்த விஷயத்தை ஹிமான்ஷு ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். தனக்கு அவார்டு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

மகனுக்கு மிக உயரிய அவார்டு கிடைத்ததற்கு அமைச்சர் கேடிஆர் டுவிட்டரில் அவரை பாராட்டி உள்ளார். எதிர்காலத்தில் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending