December 3, 2021, 5:47 am
More

  காவிரியில் திறந்துவிட்ட கன்னடரின் சிறுநீர் திருச்சி வந்தடைந்ததா எனக் காண ஸ்ரீரங்கம் வருகிறாராம் குமாரசாமி..!

  தண்ணீரே தர மாட்டேன் வேணாடுமானால் சிறுநீரை தருகிறேன் என்று வெளிப்படையாக சொன்னவன் ஆட்சி அமைக்க முயலும் போது கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றது என்று கூச்சலிடும் கேடு கெட்ட தமிழா என்ன இனமடா நீ.

  05 May17 Kumarasaamy - 1

  காவேரி நீரெல்லாம் தர முடியாது; கன்னடர்கள் சிறுநீர் கழிக்கிற நீர் வேணா வரும் தருகிறோம் என்று மஜத., தலைவர் குமாரசாமி கூறியதாகவும், திருச்சி காவேரியில் அது போல் கன்னடர்களின் சிறுநீர் வந்தடைந்ததா என்பதைக் காணத்தான் அவர் ஸ்ரீரங்கம் வருகிறார் என்றும், அதை உறுதிப் படுத்த காவிரிக்காகப் போராட்டம் நடத்தியதாகக் கூறும் திமுக., காங்கிரஸ் கட்சியினர் உடன் வரவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

  37 உறுப்பினரை மட்டுமே கொண்ட மஜத.,வின் குமாரசாமி வரும் புதன்கிழமை காங்கிரஸின் தயவில் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார். அதற்காக நாளை தில்லி செல்லவுள்ளார் குமாரசாமி. அங்கே அவர் சோனியா மற்றும் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.

  இதனிடையே தனது இன்னொரு கோயில்கள் சுற்றும் பயணமாக ஸ்ரீரங்கம் செல்லவுள்ளதாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் குமாரசாமி.

  இந்நிலையில், குமாரசாமியின் செயல்பாடுகள் குறித்தும், அவரது அரசியல் பேச்சுகள், கருத்துகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. காவிரி நீரைத் திறந்துவிடும் விவகாரத்தில், காவிரியில் நீர் திறந்துவிடமுடியாது, கன்னடர்களின் சிறுநீர் வேண்டுமானால் வரும் என்று, அண்டை மாநிலமான தமிழகத்தில் விவசாயிகள் மட்டுமல்லாது மாநில மக்களின் உணர்வு பூர்வமான போராட்டப் பிரச்னையில், ஆத்திரமூட்டும் வகையில் கருத்துகளை குமாரசாமி தெரிவித்திருந்தார் என்றும், அந்தக் குமாரசாமியின் வெற்றிக்கு இன்று தம்பட்டம் அடிக்கும் ஒரே கேடு கெட்ட மக்கள் வாழும் மண் தமிழகம்தான் என்றும் கருத்துகள் உலாவருகின்றன.

  இது தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பகிரப் படும் மேலும் சில கருத்துகள்…

  * கடந்த 5 வருஷமா காங்கிரஸ் கர்நாடகாவ ஆட்சி செஞ்சப்போ அவங்ககிட்ட காவேரி தண்ணிய திறந்து கேக்கல.
  பிஜேபி ஜெயிச்ச 5வது நிமிஷமே காவேரி தண்ணிய விட சொல்லி கேட்டாரு.
  இப்போ மறுபடியும் காங்கிரஸ் – JDS குமாரசாமி ஜெயிச்சதும் காவேரி தண்ணிய கொடுக்க சொல்லி கேக்கல.

  * தமிழகத்திற்கு காவிரி நீர் தர மாட்டேன் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் திராவிட அடிமைகளும், தமிழக தாலிபான்களும் வெக்கமின்றி காவிரிக்காக மீண்டும் போராட வருவார்கள் என்பது தான் வேதனையின் உச்ச கட்டம்…!

  * எனக்கொரு சந்தேகம். தேர்தல் முடிந்த கையோடு காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்துவிட்டது. அதற்கு கர்நாடக அரசும் சம்மதித்துவிட்டது. இப்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்துவிட்டது. தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று பிரசாரம் செய்த குமாரசாமியும், தர மாட்டேன் என்று அடம் பிடித்த சித்தராமையாவும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமையப் போகிறது.

  உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். போராளிகள் ஆதரிக்கும் கூட்டணி அரசு திறந்துவிட மறுத்தால், அப்போதும் மோடிதான் திட்டு வாங்குவாரா? அல்லது குமாரசாமி அண்டு கோ-வை சட்டையைப் பிடித்துக் கேட்பார்களா?

  * தண்ணி கிடைக்காம தமிழன் செத்தாலும் பரவால; தண்ணி தராமல் தமிழனை கொன்ன இனப்படுகொலை செய்த காங்கிரஸ்தான் ஆடசியமைக்கனும் – இதுதான் 200 ரூவா டுமிலன் டிசைன்…

  * குமாரசாமி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதாக தகவல்: காவிரி நீரை தர முடியாது என்று சொல்லி வாக்கு கேட்ட ஜனதா தளத்திற்கு ஆதரவு தரும் தி மு க மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு கருப்பு கொடி காட்டுவார்களா… தமிழின காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் போராளிகள்?

  * உண்மையாக தண்ணீர் கொடுக்க நினைப்பவனை தேர்தல் முடியட்டும் பிரச்சினைகள் இல்லாமல் தீர்த்து வைக்கிறோம் என்று சொல்லியும் அதெல்லாம் தெரியாது கோர்ட்டே சொல்லி விட்டது உடனே அமுல்படுத்து என்று போர்ட்டங்கள் செய்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தண்ணீரே தர மாட்டேன் வேணாடுமானால் சிறுநீரை தருகிறேன் என்று வெளிப்படையாக சொன்னவன் ஆட்சி அமைக்க முயலும் போது கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றது என்று கூச்சலிடும் கேடு கெட்ட தமிழா என்ன இனமடா நீ. கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக வாக்களித்து தமிழர்கள் வாழும் இடங்களில் தோல்வியை தந்து உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக்கொண்டாயே தமிழா !

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,776FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-