தூத்துக்குடியில் ரஜினி உதிர்த்த “சமூகவிரோத” வார்த்தைகள்… மற்றும் அவரது ஆர்ப்பாட்ட அணிவகுப்பு… சூப்பர் ஸ்டாரை நேசித்த பலருக்கு அதிர்ச்சியாகவும், ரஜினி மீதான வெறுப்பாகவும் பரிணமித்து இருந்தது உண்மை.
இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல… ரஜினியின் “சமூக விரோதிகள்” என்ற வார்த்தைக்காகவே இந்த படம் தோற்க வேண்டும் என்று உளமாற விரும்பினேன். இருந்தாலும் இந்த படத்தின் “கதைக்களம்” என்னை திரை அரங்கம் நோக்கி நகர்த்தியது.
தூத்துக்குடி வந்து சென்ற ரஜினியை, சந்தித்த தூத்துக்குடி மன்ற நிர்வாகிகளிடம் “நான் சொன்னதில் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்று யதார்த்தமாக ரஜினி சொல்லி இருக்கிறார்.
அதே நேரம் ரஜினி ரசிகர்கள் “தலைவா நீங்க சொன்னது நூறு சதவிகிதம் உண்மை” என்று முகஸ்துதி பாடி இருக்கிறார்கள். அதுதான் தவறு. பல தலைவர்கள் கெடுவது இது போன்ற பேச்சுக்களால்தான்.
“ஆமாம் தலைவா இது மக்கள் போராட்டம், சமூக விரோதிகளுக்கு அங்கே இடமே இல்லை” என்று சொல்லி இருக்க வேண்டும். சரி கதைக்கு வருவோம்.
வெள்ளித்திரையில் நம் தூத்துக்குடி போராட்டத்தை நிகரொத்த களத்தைத் தான் காணமுடிகிறது. “புயல்” என்றொரு பெண், அவள் நம் மக்களுக்காக உயிர் நீத்த அன்பு தங்கை “ஸ்னோலினை” நினைவுபடுத்துகிறாள்.
“நாம்தமிழர்” சீமான் மேடையில் பேசுவதைதான் ரஞ்சித் திரையில் பேசி இருக்கிறார். அவ்வளவுதான். “உடம்புதான் நமக்கு ஆயுதம்”என்று வசனம் பேசி சூப்பர் ஸ்டார் அனைவரையும் போராட்டத்திற்கு அழைக்கிறார்.
போராட்டங்கள்… அதில் போலிசார் நடத்தும் வன்முறை. எனவே சீருடை அணிந்த போலிஸ் தாக்கப்படுவது உள்பட எல்லாமே இருக்கிறது.
“ஸ்டெர்லைட்” போராட்டம் “உயிர்” காக்க என்றால், “காலா”வின் போராட்டம் “நிலம்” காக்க…
காலா திரைப்படத்தை பார்க்கும் போது, “ஸ்டெர்லைட்” நச்சு தொழிற்சாலைக்காக நாம் நம் நிலத்தைவிட்டு வேறு இடம் நோக்கி நகர முடியாது. நிலம் நம் உரிமை.
பலர் சொல்லலாம். காலா ரஞ்சித் படம் என்று. ஆனால் அந்த படத்தில் ரஞ்சித்தின் கதை கேட்டு ரஞ்சித்தின் வசனம் பேசி நடிக்க ஒரு “தில்” வேண்டும். அந்த “தில்” ரஜினியிடம் அதிகமாகவே இருக்கிறது. பாராட்ட வேண்டும்.
படத்தின் வில்லன் நடிகர் ஹரி தாதாவிடம், “காலா யார்” என்று கேட்கிறார் ஒரு சிறுமி. அந்த சிறுமியிடம், “அவன் இராவணன்” என்று சொல்கிறான் ஹரிதாதா. வில்லனுக்கு பின்னால் இராமன் சிலையும், காலா மேஜையில் “இராவண காவியமும்” பார்க்கும் போது, காலா நமக்கான கதை. நம் அரக்கர் கூட்டத்திற்கான கதை என்பதையே உணரமுடிகிறது.
பாஜக வசனத்தை தூத்துக்குடியில் ரஜினி பேசாது இருந்திருந்தால், இந்த படத்தை பாஜகவினர் கடுமையாக எதிர்த்து இருப்பார்கள். வில்லன் பேசுகிறான் “இராவணன், பத்து தலையிலும் யோசிப்பான் போல் இருக்கிறது” என்று. அந்த வகையில் ரஜினியை ஒரு “இராஜ தந்திரி”யாகவே பார்க்க தோன்றுகிறது.
சாதி மறுப்பு சொன்ன நம் புத்தர், ஆதிக்க எதிர்ப்பு சொன்ன நம் அண்ணல் அம்பேத்கர், சுயமரியாதை பேரொளி நம் தந்தை பெரியார், நம்முடைய பெருந்தலைவர் காமராஜர், நம் மூதாதை மாமன்னன் இராவணன், எல்லா காட்சிகளிலும் பின்புலமாக காட்சி தருகிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்?
இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் சூப்பர் ஸ்டாரின் எண்ணப்படியே செதுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அவர் தேர்ந்தெடுத்ததை வைத்து பார்க்கும் போது, “போராட்டத்திற்கு அவர் எதிரி அல்ல” என்றே நம்பலாம்.
“மனதோடு பேசலாம்” “டிஜிட்டல் மும்பை” “கிளீன் மும்பை” என்று படத்தில் வரும் கொடூரமான வில்லனை மோடியோடு ஒப்பிட எத்தனை ஒரு துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் ரஜினியிடம் இருக்கிறது.
எனவே மோடியின் கூட்டத்தில் ரஜினியை சேர்த்து, ரஜினிக்கு காவி வண்ணம் பூச வாய்ப்பு இல்லை. மொத்தத்தில் “மோடி கூட்டத்தை” இந்த படத்தில் வச்சி செஞ்சிருக்கிறார் ரஜினி.
இந்த படத்தை, பாஜகவினரை ஆதரிக்க வைத்தது, முதல் நாளில் முதல் ஷோ பார்க்க வைத்தது, ரஜினியின் இராஜதந்திரமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருபோதும் ரஜினி பாஜகவுடன் போக மாட்டார் என்று நம்பலாம். படத்தில் முழுக்க முழுக்க இந்து முஸ்லிம் நல்லிணக்கம் காப்பாற்றப்படுகிறது.
எது எப்படியோ… “காலா” நமக்கான படம்… இராவணன் நம்மவன்… இதிகாசத்தில் தோற்றாலும், அரக்கக் கூட்டத்தார் நாம் நிகழ்காலத்தில் வென்றே ஆக வேண்டும். அதற்காகவேனும் பலமுறை பார்க்க வேண்டிய படம்…
எஸ். டேவிட் செல்வின் Ex MLA
பின் குறிப்பு: ரஜினியின் தூத்துக்குடி பேச்சால் காறித் துப்பிவிட்டு, படத்தின் பாஜக., எதிர்ப்பு வசனங்களால் துதிபாடும் ஒரு கிறிஸ்துவரின் விமர்சனப் பார்வை
Thamilnatula இரà¯à®•à¯à®•à¯à®± கிறிதà¯à®¤à®µà®°à¯à®•ள௠அமà¯à®ªà¯à®Ÿà¯à®Ÿà¯à®ªà¯‡à®°à¯à®®à¯ அரகà¯à®•à®°à¯à®•ள௠தாமà¯.அநà¯à®¤ 6 பெரà¯à®šà¯†à®£à¯à®Ÿà¯ தவிர சொசà¯à®šà®®à¯ எலà¯à®²à®¾à®®à¯ அரகà¯à®•à®°à¯à®•ள௠இலà¯à®²à¯ˆ.காலா சீகà¯à®•ிரம௠காலாவதியாக வாழà¯à®¤à¯à®¤à¯à®µà¯‹à®®à¯.
தமிழகதà¯à®¤à®¿à®²à¯ இரà¯à®•à¯à®•à¯à®®à¯ 6 பெரà¯à®šà¯†à®£à¯à®Ÿà¯ கிறிதà¯à®¤à®µ வரà¯à®•ள௠அரகà¯à®•à®°à¯à®•ள௠தான௠.சொசà¯à®šà®ªà¯‡à®°à¯†à®²à¯à®²à®¾à®®à¯ இலà¯à®²à¯ˆ.காலா சீகà¯à®•ிரம௠காலாவதி ஆக வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯.
பà¯à®©à®¿à®¤ கரà¯à®¤à¯à®¤à®°à®¿à®©à¯ பெயரால௠பிழைபà¯à®ªà¯ˆ நடதà¯à®¤à®¿à®•௠கொணà¯à®Ÿà¯ அழிவிறà¯à®•௠அழைபà¯à®ªà¯ விடà¯à®®à¯ ஜெனà¯à®®à®™à¯à®•ள௠தேவை தானா?