பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்தியை விழாவை முன்னிட்டு வழி நெடுகிலும் அரசியல் கட்சிகளின் வாழ்த்து பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன.
மற்ற அரசியல் கட்சியினர் போலவே… தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். அவர்கள், தினகரன் முன்னிலையிலேயே அதிமுக., பேனர்களைக் கிழித்து எறிந்தனர். கைகளில் வைத்திருந்த கம்புகளால் அதிமுக., கொடிகளைக் கிழித்தனர்.
பேனர்களில் இவர்கள் கிழித்தது அதிமுக., அமைச்சர்களின் படங்களை மட்டுமல்ல… உடன் ஜெயலலிதாவின் படங்களையும்தான்…! பசும்பொன் தேவர் திருமகனாரின் படங்களையும் சேர்த்துத்தான் கிழித்தார்கள்….! அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அவர்களை கயிறு கட்டி தனியாகப் பிரித்து, அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் அனுப்பி வைத்தனர்
இந்நிலையில், அதிமுக ப்ளக்ஸ் பேனர்கள், கொடிகள் அ.ம.மு.கவினரால் கிழிக்கப் பட்டது தொடர்பாக டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டது.
இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி, வைக்கப்பட்ட அதிமுக ஃப்ளக்ஸ் பேனர்களை சேதப்படுத்தியதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
கமுதி – மதுரை சாலையில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் வரை 200க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள், அதிமுக கட்சிக் கொடிகள் அமைக்கப் பட்டிருந்தன. நேற்று அந்த வழியாக தினகரன் வந்த போது அதிமுக ப்ளக்ஸ் பேனர்கள், கொடிகள் அ.ம.மு.கவினரால் கிழிக்கப்பட்டன.
இந்நிலையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.