IMG 20191101 WA0003 - 2026

என்ஆர்ஐ வீடுகளாக தேடித்தேடி திருடும் திருடி. டெக்சாஸ் பெண்மணியின் விநோத திருட்டு.!

அமெரிக்காவின் NRI வீடுகளே குறியாகக் கொண்டு திருடி வந்த டெக்ஸாசை சேர்ந்த பெண்ணிற்கு உள்ளூர் மாவட்ட நீதிமன்றம் 37 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் ‘சாகா காஸ்ட்ரோ ‘ (44) என்ற பெண்மணி இன்னும் மூன்று பேரோடு சேர்ந்து ஒரு குழுவை ஏற்படுத்தி கொண்டாள்.

இந்த நால்வரும் சேர்ந்து 2011 முதல் 2014 வரை ஜார்ஜியா நியூயார்க் ஓஹியோ மிச்சிகன் டெக்சாஸ் நகரங்களில் என்ஆர்ஐ வீடுகளை மட்டுமே இலக்காகக் கொண்டு திருட்டு தொழில் செய்து வந்தனர். இந்தியர்களிடம்தான் தங்க நகைகள் அதிகம் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

இந்த கேங்க் திருடுவதற்கு சில தினங்கள் முன்பே எந்த வீட்டில் திருட வேண்டும் என்று திட்டமிட்டு அந்த வீட்டை பரிசீலிப்பது வழக்கம் .

வீட்டில் எத்தனை பேர் உள்ளார்கள்? யார் யார் எப்போது வெளியில் செல்வார்கள்? எப்போது திரும்பி வருவார்கள்? போன்ற விஷயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு பக்கா ப்ளான் செய்து திருடுவது அவர்கள் ஸ்பெஷாலிட்டி.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

முகத்திற்கு முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியோடு வீட்டில் உள்ளோரை பயமுறுத்தி திருடுவார்கள்.

சாகா காஸ்ட்ரோ தலைமை கண்காணிப்பில் திருட்டில் ஈடுபட்ட இந்த கும்பல் இறுதியில் பிடிபட்டது.

5 வார விசாரணைக்கு பின் கோர்ட்டில் அவள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending