ஜெர்மனில் செயல்பட்டு வரும் Oasis of peace என்ற உணவகம் மாலை 5 மணிக்கு பிறகு, அதாவது இரவு உணவுக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.
இந்த முடிவானது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என கூறியுள்ள உரிமையாளர் Rudolf Markl, இதற்கான காரணம் குறித்து கூறியதாவது, உணவகத்திற்கு வரும் சிறு குழந்தைகள் அங்கு வைக்கப்படும் Table clothes, Wine Glass போன்றவற்றை தூக்கியெறிந்து விளையாடுகின்றனர்.
மேலும், உணவகத்தில் உள்ள பொருட்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. இதனை பார்க்கும் பெற்றோர் அதனை தடுத்து அவர்களை கண்டிப்பதை தவிர்த்து, தங்கள் குழந்தைகளை செய்வதை பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது, பெற்றோர்களின் அறியாமையை இலக்காக கொண்டதே தவிர, குழந்தைகளை தடுப்பது கிடையாது. இதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இதற்கு எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் என இரண்டு விமர்சனங்களும் கலந்து வந்துள்ளதால், நாங்கள் இந்த முடிவினை தொடர்ந்து கடைபிடிப்போம் என கூறியுள்ளார்.